ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் அஸ்வர் நம்பிக்கை!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில்
முஸ்லீம்களின் வாக்குகள் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கே கிடைக்கும் என வெகுசன
ஊடக தகவல், மற்றும் பாராளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் எம்.பி. ஏ.எச்.எம். அஸ்வர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ் மற்றும் ஏனைய சிறுபான்மை
சமூகத்தினர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு தமது ஆதரவை வழங்குவதை பார்த்துக் கொண்டு,
முஸ்லிம்கள் பிழையான முடிவுகளை எடுக்க மாட்டார்கள் என அஸ்வர் மேலும்
தெரிவித்தார்.
இது முஸ்லிம்கள் சிறந்த தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கு சிறந்த தருணம் என தெரிவித்த அவர், இதனை சிறந்த முறையில் அவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை விட்டு விலகிச் செல்லுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, அவர்களின் தீர்மானம் தொடர்பில் எவ்வித நம்பிக்கையும் தமக்கில்லை. எனினும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சரியான தீர்மானமொன்றை எடுப்பார் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஹசன் அலி, எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதா? அல்லது பொது அபேட்சகரை ஆதரிப்பதா? என்ற இரு வேறு கருத்துக்கள் கட்சிக்குள் நிலவுகின்றன. எனினும் அப்பிரிவினைகள் ஊடகங்களில் வெளிப்படுத்தும் அளவுக்கு பெரிதல்ல எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்சியின் உயர்மட்டம் இன்றைய தினம் கூடுகின்ற நிலையில், கட்சியின் இறுதித் தீர்மானம் இன்று பெரும்பாலும் எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷட் பதியூதீன் அவர்களின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தொடர்ந்தும் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கப் போவதாக தெரிவித்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார். (NL)

0 Comments:
Post a Comment