உலகளாவிய ரீதியில் சர்வதேசத் தன்னார்வத் தொண்டர் தினம் டிசம்பர் 5ம்
திகதி வருடாந்தம் கொண்டாடப் படுகின்றது. இத்தினத்தை முன்னிட்டு
மட்டக்களப்பு அரசாங்க அதிபரின் அனுமதியுடனும் பிராந்தியச் சுகாதாரவைத்திய
அதிகாரியின் ஒத்துழைப்புடன் டிசம்பர் 6ம் திகதி மட்டக்களப்பு,
தாந்தாமலையில் மருத்துவமுகாம் ஒன்று நடாத்தப்பட்டது.
இப்பிரதேசத்தில் உதுவித மருத்துவ மனைகளோ, ஏனைய கிளினிக் நிலையங்களோ இல்லை. அதனடிப்படையில்.
இப்பிரதேசத்தில் உதுவித மருத்துவ மனைகளோ, ஏனைய கிளினிக் நிலையங்களோ இல்லை. அதனடிப்படையில்.
பட்டிப்பளைச் சுகாதாரவைத்திய அதிகாரி, பிராந்தியப் பற்சுகாதார பிரிவினர், மட்டக்களப்புப் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் சுகாதார உத்தியோகத்தர்கள் என பலரும் இணைந்து இச்சேவையை வழங்கினர்.
ஜீவசக்தி நிறுவனத்தின் அனுசரணையுடன்
words of peace இன் தொண்டர்கள் சுகாதாரத் திணைக்களகத்துடன் இணைந்து இந்நடமாடும் மருத்துவ முகாமை ஒழுங்குசெய்த்திருந்தனர்.
இம்முகாமில் தாந்தாமலைப் பிரதேச பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களான நெல்லிக்காடு, நாற்பதுவட்டை, பன்சேனை, கொல்லனுலை உட்பட 300 இற்குமேற்பட்டமக்கள் இச்சேவையைப் பெற்று பயனடைந்தனர்.
இம்மருத்துவமுகாமில் ஈமோக்குளோபின் பரிசோதனை, குருதிக் குளுக்கோஸ் பரிசோதனை, கண்பரிசோதனை, பற்சிகிச்சை, பொதுவான உடற்பரிசோதனை என்பவற்றுடன் இலவசமாகமருந்துகள் வழங்கப்பட்டது.
அத்துடன் இப்பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு அவர்களது தேவைகளுக்கு ஏற்ப மூக்குக் கண்ணாடி மற்றும் வெண்படலச் சத்திரசிகிச்சைக்கான வில்லைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கும்
words of peace இன் தொண்டர்கள் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.
0 Comments:
Post a Comment