சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர்தினத்தை சிறப்பிக்கும் வகையில்
மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப் பற்று தெற்கு பிரதேச செயலகத்தினால்
வருடாந்தம் நடாத்தப் படுகின்ற சர்வதேசசிறுவர்,முதியோர் மற்றும்
விஷேடதேவைக்குரியவர்களு;ககான நிகழ்வு வெள்ளிக் கிழமை (05) கோரகல்லிமடு ரெஜி
கலாசாரமண்டபத்தில் நடைபெற்றது.
பிரதேசசெயலாளர் கோ.தனபாலசுந்தரம்
தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்குடா வலயக்கல்விப் பணிப்பாளர்
எஸ்.ஸ்ரீகிருஸ்னராஜா மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் உரிமைமேம்பாட்டு
உத்தியோகத்தர் வீ.குகதாசன் மற்றும்,
முன்பள்ளி சிறுவர்கள்,
சிறுவர் கழகசிறுவர்கள் விஷேடதேவைக்குரியவர்கள் மற்றும் முதியோர் சங்க
உறுப்பினர்களின் உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும்
அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது
கலைநிகழ்ச்சிகளும் பாடசாலைமட்டத்தில் சர்வதேசசிறுவர் மற்றும் முதியோர்
தினத்தைமுன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான
பரிசளிப்புவைபவமும் நடைபெற்றன.
சிறுவர்கள் மற்றும் முதியோர்களின் கலை,
கலாசார படைப்புகளை உள்ளடக்கிய “வித்து” எனும் சஞ்சிகை பத்தாவது
முறையாகவெளியிட்டு வைக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment