
நற்பிட்டிமுனை வயல் வீதியில் வெள்ளநீர் பெருக்கெடுத்துள்ளதால் மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். தற்போது பெய்து வரும் அடைமழை காரணமாக இந்த வீதி முற்றாக நீரில் மூழ்கியுள்ளது. இதேவேளை குறித்த வீதியில் முறையற்ற முறையில் வாய்க்கால் தோண்டப்பட்டுள்ளதால் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். ஒருபுறம் பொதுமக்களும் மறுபுறம் வயல்நிலமும் காணப்படும் இந்த வீதியில் பொதுமக்கள் வாழும் பகுதியிலேயே வாய்க்கால் தோண்டப்பட்டுள்ளது. இதனால் இந்தப் பகுதியில் வாழும் மக்கள் நீண்ட காலமாக தங்களுடைய வாகனங்களை எடுத்துச் செல்லவோ, கட்டுமான பணிகளுக்குரிய கல்,மண் போன்றவற்றை எடுத்துச் செல்லவோ முடியாத நிலை காணப்படுகின்றது. காலம் காலமாக வெள்ளப் பெருக்கு ஏற்படும் போதெல்லாம் வீட்டு முற்றத்துக்கு முன்னால் உள்ள வாய்க்காலில் நீர் பெருக்கெடுப்பதால் போக்குவரத்து மாத்திரமல்ல உயிர் ஆபத்தும் ஏற்படுவதாக இந்த மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். குறித்த வாய்க்காலை வயல்நிலம் காணப்படும் எதிர்பக்கமாக தோண்டி தற்போதுள்ள வாய்க்காலை முடி மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பளிக்குமாறு இவர்கள்; கோரிக்கை விடுக்கின்றனர்.
0 Comments:
Post a Comment