திருகோணமலை,லவ்லேன்.ஜமாலியா,துளசிபுரம்,பள்ளத்தோட்டம்,சிறிமாபுரம்,நெல்சன்புரம்
ஆகிய பிரதேச முக்கியஸ்த்தர்கள் அடங்கிய கலந்துரையாடல் கூட்டம்
ஞாயிற்றுக்கிழமை நேற்று 21 ம்திகதி பிற்பகல் திருகோணமலை ஐ.தே.க.இளைஞர்
அமைப்பாளர் ஏ.ஆர்.எம்.பௌசி தலைமையில் துளசிபுரத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில்
முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.எம்.மஹ்ருப் கிழக்கு மாகாண ஐ.தே.க.
உறுப்பினர் இம்றான் மஹ்ருப் பிரதேச அமைப்பாளர்கள் மு.கா.ஐ.தே.கட்சி
ஸ்ரீ.ல.சு.கட்சி.ஜே.விபி. மற்றும் கட்சிக்காரர்களும் இந்நிகழ்வில் கலந்து
கொண்டு எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரபால
சிறசேனவின் வெற்றியை உறுதி செய்ய எவ்வாறு செல்படுவது என்பது பற்றி இங்கு
கலந்துரையாடிதோடு.ஐ.தே.க.தலைவர் ரணில் விக்கிரம சிங்க எதிர் வரும் 27
ஆம்திகதி புல்மோட்டைப் பிரதேசத்திற்கும்,பொது வேட்பாளர் மைத்திரிபால
சிறிசேன 29ம் திகதி கிண்ணியா, கந்தளாய்ப் பிரதேசத்திற்கும் தேர்தல்
பிரசாரத்திற்கு வருகை தர இருப்பதால் இதன் போது எவ்வாறு நடந்துகொள்வது
பற்றிக் கலந்துரையாடினர்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர்
இம்றான் மஹ்ருப் உரையாற்றும் போது தெரிவித்ததாவது. திருகோணமலை மாவட்டத்தைச்
சேர்ந்த மூவினத்தவர்களும் இணைந்து மாற்றமொன்றை விரும்புகின்றார்கள்.மகிந்த
அரசாங்கம் இனங்களிடையே பல குரோதத்தை ஏற்படுத்தியுள்ளது.மக்களிடையேயுள்ள
ஐக்கியம் குளைந்து போயுள்ளது. வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் பொது
வேற்பாளரை ஆதரித்து வெற்றியடையச் செய்வோம் எனக் கேட்டுக் கொண்டார்.
0 Comments:
Post a Comment