22 Dec 2014

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் விலகி பொது எதிரணியில் இணைந்துள்ளது.

SHARE
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்து ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று திங்கட்கிழமை விலகி பொது எதிரணியில் இணைந்துள்ளது. 
ரிஷாட் பதியுதீன் தான் வகித்து வந்த அமைச்சுப் பதவியிலிருந்து விலகியதுடன், அதனை விளக்கி 4 பக்க கடிதமொன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ளார்.
ரிஷாட் பதியுதீனுடன், பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி மற்றும் 7 மாகாண சபை உறுப்பினர்களும் பொது எதிரணியில் இணைந்துள்ளனர். பொது எதிரணியில் இணைந்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
SHARE

Author: verified_user

0 Comments: