30 Dec 2014

சர்வதேச கண்காணிப்பாளர் குழு நேற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம்

SHARE
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கண்காணிப்புகளுக்காக உத்தியோகபூர்வ சர்வதேச கண்காணிப்பாளர் குழுவினர் நேற்று திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்தனர்.

மட்டக்களப்புக்கு வருகை இந்தக் குழுவினர் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமான திருமதி .பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஏ.எம்.எம்.கபீர் ஆகியோரைச் சந்தித்து  தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள், பதிவு செய்யப்பட்டுள்ள தேர்தல் வன்முறைகள், அது தொடர்பான செயற்பாடுகள் குறித்துக் கலந்துரையாடினர்.

அத்துடன், இக்குழுவினர், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு அலுவலகத்திற்கும், மாவட்ட தேர்தல்கள் திணைக்கள அலுவலகத்திற்கும் விஜயம் செய்துடன் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டனர்.

இக்குழுவில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கண்காணிப்புகளுக்காக உத்தியோகபூர்வ சர்வதேச கண்காணிப்பாளர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நயீம் அகமட், இலங்கையின் சர்வதேச கண்காணிப்பாளர் குழுவின் ஏ.எம்.ஆரீப், வி.பிரதீபன் ஆகியோர் அடங்கியிருந்தனர்.

இரண்டு நாட்கள் இரண்டு நாட்கள் தங்கியிருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இக்குழு மாவட்டத்தின் பல இடங்களுக்கும் சென்று பார்வையிடவுள்ளனர்.


SHARE

Author: verified_user

0 Comments: