30 Dec 2014

கடலில் தீப்பற்றிய இத்தாலிய கப்பலில் இன்னும் 115 பயணிகள் இருப்பதாக தகவல்

SHARE
கிரீஸுக்கு அருகிலுள்ள கடலில் தீப்பற்றிய இத்தாலிய பயணிகள் கப்பலில் இன்னும் 115 பயணிகள் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தீ விபத்தில் ஒருவர் பலியானதுடன் 70பேர் காயமடைந்த நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கப்பலில் 478 பயணிகள் இருந்துள்ளனர். இந்த  பயணிகளை காப்பாற்றுவதற்காக ஹெலிகொப்டர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த கப்பலின் படுக்கையறையில் ஏற்பட்ட தீ ஏனைய பகுதிகளுக்கும் பரவியதாக தெரிவிக்கப்படுகிறது.சுழல் காற்றுடன் கூடிய குளிரான காலநிலை நிலவுவதனால் மீட்புப்பணிகளுக்கு தடைஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
SHARE

Author: verified_user

0 Comments: