மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட
மிச்நகர், மீராகேணி, தாமரைக்கேணி ஆகிய கிராமங்களில் ரயில்வே தண்டவாளங்களை
ஊடறுத்துச் செல்லும் வீதிகளை ரயில்வே திணைக்களம் தோண்டி போக்குவரத்துக்கு
தடை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து
பொதுமக்கள் புதன்கிழமை (17) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது பயணித்துக்கொண்டிருந்த புகையிரதத்தை இடைமறித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், ஆர்ப்பாட்ட இடத்துக்கு வந்த ஏறாவூர் நகரசபைத் தவிசாளர்
செய்யித் அலி ஸாஹிர் மௌலானாவுடன், ரயில்வே திணைக்கள அதிகாரிகளும்
பொலிஸாரும் பொதுமக்கள் முன்னிலையில் கலந்துரையாடினர்.
இதன்போது தண்டவாளங்களை ஊடறுத்துச் செல்லும் வீதிகளை பொதுமக்கள்
போக்குவரத்துக்கு பயன்படுத்தக்கூடியதாக ரயில் பாதை சீரமைப்பு பணி;களை
மேற்கொள்ளுதல், மேற்படி வீதிகளை புனரமைப்பதுடன், ரயில்வே
பாதுகாப்புக்கடவை அமைக்கப்பட்டு பாதுகாப்புக்கடவை ஊழியர்கள்
நியமிக்கப்படுதல் உள்ளிட்ட விடயங்களில் இணக்கம் காணப்பட்டன.
இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டு மேற்படி புகையிரதம் பயணிப்பதற்கும் இடமளிக்கப்பட்டது.
ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மேற்படி கிராமங்களுக்
கான இந்த வீதிகளில் மிக நீண்டகாலமாக போக்குவரத்துக்கள் இடம்பெற்றுவருகின்றன.jpg)
.jpg)
0 Comments:
Post a Comment