17 Dec 2014

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர், ரூபி கிராமத்தில் குடிசையொன்று இனந்தெரியாதோரினால் தீக்கிரை

SHARE

 மட்டக்களப்பு மாவட்டத்தின்  ஏறாவூர் ரூபி கிராமத்தில் புதன்கிழமை (17) அதிகாலை  குடிசையொன்று இனந்தெரியாதோரினால் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

பன்புல் பாய் பின்னுவதற்குரிய பருத்திமணை தளபாடங்கள் மற்றும் ஏனைய பொருட்கள் உள்ளிட்ட 75000 ரூபாய் பெறுமதியான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளதாக இக்குடிசையின் உரிமையாளர் முஹம்மத் ஹஸன் பாத்தும்மா (வயது 53) பொலிஸாரின்  வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

கணவனை இழந்த தானும் தனது தாயும் உறங்கிக்கொண்டிருந்தபோது தீப்பந்;தங்களுடன் வந்த  சிலர்  தனது குடிசைக்கு தீ வைத்துவிட்டு ஓடிச்சென்றதை  தான் கண்டதாகவும் அவர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

தனது காணியை அடாத்தாக கைப்பற்றிக்கொள்ள முயற்சிக்கும் ஒருவராலேயே தான் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு வருவதாகவும்   ஏற்கெனவே இரு தடவைகள் தனது குடிசை சேதப்படுத்தப்பட்டதாகவும் தனது வளவில் பயிரிடப்பட்டிருந்த பயன்தரும் பயிர்கள் அவ்வப்போது அழிக்கப்பட்டதாகவும்  பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில்  ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.








SHARE

Author: verified_user

0 Comments: