20 Dec 2014

அம்பாறை மாவட்ட தமிழ், முஸ்லிம் பிரதேச இளைஞர்களுக்கான ஒன்று கூடல் மாநாடு

SHARE
பொது எதிரணியின வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் முகமாக, அம்பாறை மாவட்ட தமிழ், முஸ்லிம் பிரதேச இளைஞர்களுக்கான ஒன்று கூடல் மாநாடு, சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் எதிர்வரும் வரும் ஞாயிற்றுக்கிழமை (21) பி.ப. 3 மணியளவில் இடம் பெறவுள்ளதாக, ஐ.தே.க.வின் இளைஞர்கள் அமைப்பாளரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.எச்.எச்.எம். நபார் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர்கள் அமைப்பாளரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.எச்.எச்.எம். நபார் தலைமையில் இடம்பெறவுள்ள இம்மாநாட்டில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு அம்பாறை மாவட்ட தமிழ், முஸ்லிம் இளைஞர்களுடன் சமகால அரசியல் நடவடிக்கைகள், எதிர்கால அரசியல் முன்னெடுப்புக்கள், உள்நாட்டு வெளிநாட்டு தொழில் நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட உள்ளது.

மேலும் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, நாட்டில் இன ஒருமைப்பாட்டின் மூலம், சிறந்த இளைஞர்கள் கட்டமைப்பை உருவாக்கும் வேலைத்திட்டங்களில், இளைஞர்களை இணைக்கும் செயற்றிட்டத்தை முன்னெடுத்து வருவது தொடர்பாகவும் விளக்கமளிக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வுக்கு பொது எதிரணியின் முக்கியஸ்தர்கள், நாடாளுமன்ற  உறுப்பினர்களான ருவான் விஜயவர்த்தன, ரோசி சேனாநாயக்க, ரஞ்ஜன் ராமநாயக்க, மேல் மாகாண சபை உறுப்பினர்களான ஹிருணிகா, முஜிபுர் ரஹ்மான், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மஞ்சுள பெர்னான்டோ, மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி, ஊவா மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் ஹரீன் பெர்னான்டோ உட்பட மேலும் பல பிரமுகர்களும் கலந்துகொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: