4 Dec 2014

சிவானந்தன் சஞ்சிகை வெளியீடு

SHARE
மட் சிவானந்தா தேசிய பாடசாலையின் “சிவானந்தன்” சஞ்சிகை வெளியீடு நேற்று புதன் கிழமை (03)  வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.

வித்தியாலய அதிபர் கே.மனோராஜ் தலமையில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு ஆத்மீக அதிதியாக மட்.இராமகிருஸ்ண மிசன் தலைவர் சுவாமி சதுர்புஜானந்தா மகராஜ், கௌரவ அதிதிகளாக மட்.போதனா வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் எம்.அகிலன் மற்றும் கிழக்குமாகாண உதவிக் கல்விப் பணிப்பாளர் (தமிழ்) எஸ்.சிவநித்தியானந்தா ஆகியோரும் சிறப்பு அதிதிகளாக முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கா.புண்ணியமூர்தி மற்றும் மட்டக்களப்பு கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் (தமிழ் துறை) எஸ். யுவராஜ் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இதன்போது சிவானந்தன் சஞ்சிகையின் முதற் பிரதியினை வித்தியாலய அதிபர் கே.மனோராஜிடமிருந்து மட்.இராமகிருஸ்ண மிசன் தலைவர் சுவாமி சதுர்புஜானந்தா மகராஜ் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்தாகும்.





















SHARE

Author: verified_user

0 Comments: