சுகாதார வார விழிப்புணர்வுக் கருத்தரங்கு
சுகாதார வாரத்தினை முன்னிட்டு ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் தலைமையில் கோளாவில் அம்மன் மகளிர் இல்லத்தில் உள்ள பிள்ளைகளுக்கு சுகாதார பழக்க வழக்கங்கள் மற்றும் பற்சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று புதன் கிழமை (03) அம்மன் இல்லக்கட்டிடத்தில் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் மேற்பார்வை சுகாதார பரிசோதகர் எஸ்.மகேஸ்வரன் ஆலையடிவேம்பு சுகாதார பரிசோதகர் வி. கேதிஸ்வரன் ஆலையடிவேம்பு பொது சுகாதார பரிசோதகர் கே.மனோகரன் எஸ்.ரி ஏ பவுண்டேசன் நிறுவன திட்ட இணைப்பாளர் வே.வாமதேவன் மற்றும் இல்ல பணியாளர்களும் பிள்ளைகளும் கலந்து கொண்டனர்.
இதன்போது பற்சுகாதாரம் சுகாதார பழக்க வழக்கங்கள் தொற்று நோய்களை எவ்வாறு தவிர்ப்பது போன்ற பல விடயங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டன.
0 Comments:
Post a Comment