9 Dec 2014

கல்வியியலாளர் எம்.ஜ.எம். அமீன் அவர்களுக்கு கௌரவிப்பு

SHARE

பேராதனைப் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற சிரேஷ்ட விரிவுரையாளரும் முன்னாள் அறபு, இஸ்லாமிய நாகரிகத்துறைத் தலைவரும் கல்வியியலாளருமான ஹெம்மாதகமை, ஹிஜ்ராகமையைச் சேர்ந்த பன்னூலாசிரியர் எம். ஜ. எம்;. அமீன் அவர்களை கௌரவிக்கவும், அவரது 1. முஸ்லிம் ஸ்பையின், 2. சிவப்புக் கோடு ஆகிய இரு நூல்களை வெளியிடுவதற்குமான நிகழ்வு, எதிர்வரும் 13 ஆந்திகதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு சாய்ந்தமருது ‘பரடைஸ்’ வரவேற்பு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

கிழக்கிலங்கையைச் சேர்ந்த பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் அமீன் அவர்களது மாணவர்கள் நலன் விரும்பிகளைக் கொண்ட ‘கிழக்கு முஸ்லிம் கல்விச் சமூக அமைப்பி’னால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வு, தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும் முன்னாள் இஸ்லாமியக் கற்கை, அறபுமொழிப் பீடாதிபதியுமான கலாநிதி, மௌலவி எம். எஸ். எம். ஜலால்தீன் அவர்களின் தலைமையில் நடைபெறும்.

வரவேற்புரையை அட்டாளைச்சேனைக் கல்விக்கல்லூரி விரிவுரையாளர், அஷ்ஷெய்க். எப். எம். அன்ஸார் மௌலானா அவர்கள் நிகழ்த்துவார். பேராதனைப்பல்கலைக்கழக ஓய்வு பெற்ற தமிழ்த்துறைப் பேராசிரியர் எம். ஏ. எம். நுஃமான் நூல் விமர்சனத்தையும், சிறப்புரையையும் ஆற்றுவார்.
பேராதனைப் பல்கலைக்கழக மெய்யியல் துறை முன்னாள் தலைவரும் ; முஸ்லிம் கல்வி மாநாட்டின் தலைவருமான பேராசிரியர் எம். எஸ். எம். அனஸ் அமீன் பற்றிய சிறப்புரையை வழங்குவார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம். ஜ. எம். ஜெஸீல் மற்றொரு நூலான ‘சிவப்புக் கோடு’ பற்றிய விமர்சன உரையையும் ; அம்பாரை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா சபைத்தலைவர் மௌலவி எஸ். எச். ஆதம்பாவா, அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அஷ்ஷெய்க் எம். ஜ.  அமீர் ஆகியோர் வாழ்த்துரையையும், கிழக்குப்பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ஜஃபர் ஹுஸைன் நன்றியுரையையும் நிகழ்த்துவார்கள். அமீன் அவர்கள் பற்றிய அரபு, தமிழ் கவிதைகளும் இடம்பெறவுள்ளன.
SHARE

Author: verified_user

0 Comments: