அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு விபுலானந்தா மொன்டிசோரி முன்பள்ளிப்
பாடசாலையின் வருடாந்த விபுல விழுதுகளின் விடுகை விழா ஞாயிறன்று காரைதீவு
விபுலானந்தா மணி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
பிரதம அதிதியாகக் கலந்து கொண்டுரையாற்றிய பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் புகழாரம் சூட்டினார்.
இவ்விடுகைவிழா பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா தலைமையில் நடைபெற்ற வேளை
கௌரவ அதிதிகளாக அமைச்சரின் இணைப்புச் செயலாளர் தேசமான்ய
வீ.கிருஸ்ணமூர்த்தி, பிரதிப் பிரதம கணக்காய்வாளர் சிவ.சசிகரன், கணக்காளர்
எம்.கேந்திரமூர்த்தி, வைத்திய அதிகாரி டாக்டர் பி.சுரேஸ்குமார் ஆகியோர்
கலந்து சிறப்பித்தனர்.
மொன்டிசோரியின் ஸ்தாபக ஆசிரியை திருமதி விக்ரோறியா, சுகந்தி சத்தியசீலன்
மற்றும் ஆசிரியை திருமதி சிவரதிதர்மலிங்கம் ஆகியோர் பாராட்டிக்
கௌரவிக்கப்பட்டனர்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்:
இவ்வருட விழாவின் கலையம்சங்கள் அனைத்தும் மிகவும் சிறப்பாக இருந்தன. 18
வருடங்களாக எந்தச் சுவையும் குன்றாமல் வளர்ந்து வரும் இப்பாடசாலை
மென்மேலும் வளர வேண்டும். அடுத்த வருடத்திற்கான மாணவர் அனுமதி இவ்வருடம்
ஏப்ரலிலே முடிந்து விட்டதாக அறிந்து பெருமைப்பட்டேன்.
ஆசிரியை சுகந்தி அர்ப்பணிப்புள்ள சேவையாளர் குழந்தைகளை அன்போடு
ஆகர்சிப்பதில் அவருக்கு நிகர் அவரே. மேலும் காரைதீவில் புலமைப்பரிசில்
சித்தி பெற்ற 35 மாணவர்களையும் பாரபட்சமின்றி பாராட்டினீர்கள். ஏனைய
சாதனைகளுக்கும் இது விஸ்தரிக்கப்பட்டால் நல்லது. என்றார்.
கௌரவ அதிதி வீ.கிருஸ்ணமூர்த்தி உரையாற்றுகையில்:
நாம் பிரதேசசபை நடாத்திய காலத்தில் பிரதி வருடமும் சாதனை மாணவர்களை
பாராட்டிக் கௌரவித்து வந்தோம். ஆனால் கடந்த சில வருடங்களாக காரைதீவில்
அந்நிகழ்வு இடம்பெறவில்லை. அதற்காக அம்முறை இந்த மேடையில் அனைத்து சித்தி
பெற்ற மாணவர்களையும் கௌரவிப்போம் என பணிப்பாளரிடம் கேட்ட போது அதற்கு
இணங்கினார்.அதற்கமையா அனைவரும் இங்கு பாராட்டப்படுகின்றனர். என்றார்.
விழாவில் தரம் 5 புலமையாளர்கள் 35 பேர் பரிசு வழங்கி பாராட்டிக்
கௌரவிக்கப்பட்டனர். விடுகையுறும் 59 மாணவர்கள் பரிசுகள் சான்றிதழ்கள்
வழங்கி பாராட்டி வழியனுப்பப்பட்டனர். குழந்தைகளின் கண்கவர் கலை
நிகழ்ச்சிகள் சபையோரை வெகுவாகக் கவர்ந்தன.
0 Comments:
Post a Comment