கன்னியா வரோதய நகரில் உள்ள பிரதம செயலாளர் வளாகத்தில் அமைக்கப்பட உள்ள
கிழக்கு மாகாண சபைக்கான சபா மண்டபம் மற்றும் பேரவைச் செயலகத்துக்கான
அடிக்கல் நடும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (18) காலை நடைபெற்றது.
இக்கட்டங்கள் 200 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளன.
கிழக்கு மாகாண முதல் அமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் மெற்றும் தவிசாளர் ஆரியவதி கலபதி ஆகியோர் இதனை நட்டு வைத்தார்கள்.
இதனைத் தொடர்ந்து மாகாண அமைச்சுகளின் செயலாளர்களும் பணிப்பாளர்களும் கற்களைநட்டு வைத்தனர்.
கூட்ட மண்டபம், கட்சி தலைவர்கள் அறை, மாகாண சபை உறுப்பினர்களின் தேநீர்
சாலை, பேரவைச் செயலகம் என்பன இக்கட்டடத்தில் அமையப் பெற உள்ளது.
தற்போது கிழக்கு மாகாண சபையின் கூட்டகள் உட்துறைமுக வீதியில் அமைந்துள்ள முதலமைச்சர் செயலக கட்டடத்தில் நடைபெற்று வருகின்றது.
2016ஆம் ஆண்டு தொடக்கம் புதிய கட்டடத்தில் மாகாண சபை அமர்வுகள் நடைபெறும்.

0 Comments:
Post a Comment