மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் மூன்று நாட்களாக பெய்து வருகின்ற மழையினால் பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட தாழ்வான பல கிராமங்கள் மழை நீரினால் மூள்கியுள்ளன.
குறிப்பாக மண்டூர் பிரதேசத்தை உள்ளடக்கிய கிராமங்களான மண்டூர் வேத்துச்சேனை, தம்பலவத்தை, மருங்கையடிப்பூவல், சங்கர்புரம் கணேசபுரம், வெல்லாவெளி, போன்ற கிராமங்கள் வெள்ள நீரினால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. நேற்று இரவு தொடச்சியாக பெய்த மழையினால் மருங்கையடிப்பூவல் கிராமத்தில் உள்ள தாழ்வான பல வீடுகள் நீரில் மூள்கியுள்ளன. வீதியால் பெருக்கேடுத்த வெள்ள நீர் கட்டுக்கடங்காது வீதிகளை உடைத்து பல வீடுகளுக்குள் உட்புந்துள்ளது. இது தொடர்பாக பிரதேச வாசிகள் பிரதேச செயலாளர் மற்றும் பொலிஸ் நிலையம் கிராமசேவை உத்தியோகத்தர் ஆகியோருக் அறிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிடுவதற்கு பிரதேச செயலகத்திலிருந்து பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் வருகைதந்திருந்தனர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதிய உணவுகள் சமைக்கப்பட்டு பாலர் பாடசாலையில் வைத்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் குறிப்பிட்டிருந்தார்.
மண்டூரில் இருந்து வெல்லாவெளியினுடாக செல்லும் பிரதான கோசுகையினுடாக வெள்ள நீர் பெருக்கேடுத்து செல்வதால் மக்கள் போக்குவரத்தில் ஈடுபடமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது .அத்தோடு மண்டூரில் இருந்து தம்பலவத்தையீனூடக செல்லும் பாலத்தடி மதகுகினூடகவும் நீர் பாய்ந்து செல்வதால் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது மக்களினன் நலன் கருதி இரு இடங்களிலும் பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளனர். ஆத்தோடு மண்டூர் குருமன்வெளி ஊடான படகுச் சேவையும் அதிக காற்று மழையினால் தாமதமாகவே நடைபெறுகின்றது. இதனால் மக்களின் போக்குவரத்தில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளது.
இந்த தொடர் மழையினால் பல்லாயிரக்கணக்கான வயல் நிலங்கள் வீட்டுத்தோட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன. பல வீதிகளில் போக்குவத்து செய்ய முடியாத நிலையில் வீதிகள் நீரினால் மூழ்கியுள்ளது. தொடந்து மழை பெய்யுமானால் பல கிராமங்கள் நீரில் மூழ்கும் நிலமை ஏற்படும்.





0 Comments:
Post a Comment