என்னுடைய வீட்டில் அப்பம் சாப்பிட்டுவிட்டு மறுகனம் மறுபக்கம் சென்றவர்கள்
தொடர்பில் கவலைகொள்ள தேவையில்லை. வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்பட்ட
திட்டங்களே எதிர்தரப்பின் கொள்கை பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதில்
வேறு ஒன்றும் இடம்பெறவில்லை' என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.'அரசாங்க சேவையின் எண்ணிக்கையை குறைப்பதற்கு எதிர்தரப்பினர் முயல்கின்றனர். இதைதான் அன்று ஐக்கிய தேசிய கட்சி செய்தது. வங்கிகள், துறைமுகங்கள், விமானநிலையம்; உள்ளிட்ட பல துறைகளை தனியார் மயப்படுத்துவதற்கான பாவ காரியங்களுக்கு இவர்கள் வித்திடுகின்றனர்' எனவும் அவர் தெரிவித்தார்.
உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை(20) மாலை அக்கரைப்பற்று பஸ்தரிப்பிட முன்றலில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
'30 வருடம் இந்த நாட்டில் நிலவிய கொடுர பயங்கரவாதம் காரணமாக பள்ளிவாசலுக்கு சென்றவர்கள் கொலை செய்யப்பட்டனர். பாடசாலைக்கு சென்றவர்கள், வைத்தியசாலைக்கு சென்றவர்கள், சந்தைக்கு சென்றவர்கள், வயல்களுக்கு சென்றவர்கள், கடலுக்கு சென்றவர்கள், ஏனைய தொழில்களுக்கு சென்றவர்கள் எல்லாம் கொலை செய்யப்பட்டனர்.
அது ஒரு இருண்டகாலமாக காணப்பட்டது. நான் ஆட்சிக்கு வந்த நான்Nகு ஆண்டுகளில் கொடிய பயங்கரவாதத்தை நிறைவுக்கு கொண்டு வந்தேன். இன்று நீங்கள் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள்.
அதுமட்டுமன்றி, இன்று நீங்கள் எங்கும் செலல்லாம். உங்கள் பிள்ளைகளின் கல்வியை எந்த தடையுமின்றியும் தொடரலாம், உங்கள் தொழில்களை சிறப்பாக மேற்கொள்ள முடியும். அதற்கான வசதிகள் அனைத்தையும் நான் செய்துள்ளோன்.
மத்தளயிலிருந்து புகைவண்டி எப்போது இங்கு வரும் என்பதையே நான் இப்போது பார்த்துகொண்டிருக்கின்றேன்.
வசதியில்லாத ஏழை மக்கள் புனித ஹஜ்ஜூக்கு செல்வதற்கு நான் வசதிகளையும் உதவியினையும் செய்யவுள்ளேன். அதற்கு ஏனைய வசதிபடைத்தவர்கள் எனக்கு உதவ வேண்டும்.
நகரம், கிராமம் என்ற போதமில்லமல் சகல பிரதேசங்களிலும் கிழக்கின் நவோதையத்திட்டத்தின் கீழ்; மஹிந்தோதைய கல்விக் கூடங்களை உருவாக்கியுள்ளேன்.
இதன்மூலம் உங்கள் பிள்ளைகள் நல்ல கல்வியை, தொழில்நுட்ப அறிவை வளர்த்துகொள்ள முடியும்' என அவர் மேலும் தெரிவித்தார்.(tm)
0 Comments:
Post a Comment