மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள்
மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸின் வழிகாட்டலில்
எயிட்ஸ் நோய் ஒழிப்பு வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச
செயலாளர் பிரிவுகளிலும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
டிசம்பர் 01 தொடக்கம் 07 ஆம் திகதி வரை தேசிய எயிட்ஸ் நோய் ஒழிப்பு வாரம் அனுஷ்டிக்கப்பட்டது.
இதற்கமைவாக மட்டக்களப்பு தேசிய இளைஞர்
சேவைகள் மன்றத்தின் அனுசரனையுடன் மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர்
பிரிவுகளிலுமுள்ள பிரதேச இளைஞர் கழங்களின் ஏற்பாட்டில் எயிட்ஸ் நோய்
ஒழிப்பு தொடர்பாக விழிப்பூட்டும் செயலமர்வுகள் நடாத்தப்பட்டது.
அதன் இறுதி நிகழ்வு கோறளைப்பற்று தெற்கு
கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் இளம் சுடர் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில்
அதன் தலைவர் த.கிசோத் தலைமையில் முறக்கொட்டான்சேனை மாதர் கிராம அபிவிருத்தி
சங்கக் கட்டிடத்தில் இடம்பெற்றது.
இதன் போது வளவாளராக இளைஞர் சேவைகள்
அதிகாரி ரீ.வித்தியன் கலந்து கொண்டு எயிட்ஸ் நோய் தொடர்பாகவும் அதன்
விளைவுகள் மற்றும் ர்ஐஏ தொற்றிலிருத்து பாதுகாத்து கொள்வது தொடர்பில்
இளைஞர்,யுவதிகள் விழிப்புடன் எவ்வாறு செயற்படுவது தொடர்பாக
விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்
கழகங்களின் சம்மேளனத்தின் உப தலைவர் எம்.ரீ.எம்.பாரிஸ் உட்பட
இளைஞர்,யுவதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment