மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பகுதியில், யுவதி ஒருவரை திருமணம்
செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி அந்தரங்க உறுப்பை காட்டியதாக கூறப்படும்
இளைஞரைத் தாம் கைது செய்திருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
19 வயதான யுவதியிடமே மேற்படி இளைஞன் தனது அந்தரங்க உறுப்பை காட்டியதாக
குறித்த யுவதி ஏறாவூர் பொலிஸில் செய்த முறைப்பாட்டை அடுத்து, இன்று (07)
ஞாயிற்றுக்கிழமை பகல் அந்த இளைஞன் கைது செய்யப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார்
தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் குறித்த இளைஞனை நீதிமன்றில் ஆஜர் செய்யவிருப்பதாகவும் பொலிஸார் மேலும் கூறினர்
0 Comments:
Post a Comment