7 Dec 2014

சாய்ந்தமருது ரியாலுல் ஜன்னாஹ் வித்தியாலய பரிசளிப்பும் கலை நிகழ்ச்சியும்

SHARE
சாய்ந்தமருது ரியாலுல் ஜன்னாஹ் வித்தியாலயத்தில், 2014ம் ஆண்டில் பல்வேறு துறைகளில் முதன்மை பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் கலை நிகழ்ச்சியும் சாய்ந்தமருது ரியாலுல் ஜன்னாஹ் வித்தியாலயத்தின் அதிபர் எம்.ஐ.சம்சுதீன் தலைமையில் வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சாய்ந்தமருது கோட்ட கல்வி அதிகாரி ஐ.எல்.ஏ.ரஹுமான் கலந்து கொண்டார். கௌரவ அதிதியாக சாய்ந்தமருது மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் என்.ஆரீப் கலந்து கொண்ட அதேவேளை விசேட அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினா் ஏ.எம்.ஜெமீலின் பிரத்தியோக செயலாளர் சீ.எம்.ஏ.முனாஸ் கலந்து கொண்டார். கல்முனை மஹ்முத் மகளிர் கல்லூரியின் முன்னாள் அதிபர் ஐ.எல்.ஏ.மஜீத் மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் கல்வித்திணைக்கள அதிகாரிகள் அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள் பெற்றோர் என பேரம் திரளானோர் கலந்து கொண்டனர்.
கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி கடல் பேரலையினால் முற்றாக பாதிக்கப்பட்ட இப்பாடசாலை தற்போதைய அதிபர் எம்.ஐ.சம்சுதீனின் வருகையைத் தொடர்ந்து பல்வேறு மட்டங்களில் முன்னேறி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது குறித்த இப்பாடசாலையில் விசேட தேவையுடையவர்கள் கற்கும் பிரிவும் ஆங்கில கற்கைப் பிரிவும் இயங்கி வருவதும் விசேட அம்சமாக நோக்கக் கூடியது.
SHARE

Author: verified_user

0 Comments: