11 Dec 2014

பயிற்சியை முடித்துக் கொண்ட இராணுவ வீரர்கள் பதவி ஏற்கும் நிகழ்வு

SHARE

இராணுவத்தில் புதிதாக இணைந்து கொண்ட 405 இராணுவ வீரர்கள் தங்களது பயிட்சியை முடித்துக் கொண்டு பதவி ஏற்கும் நிகழ்வு நேற்று (10.12.2014) இரானுவத்தின் மட்டக்கப்பு மாவட்டத்தின் புனானை 23வது படைப்பிரிவு தலைமையக மைதானத்தில் இடம் பெற்றது.

இந்தப் பயிற்சி நிறைவு நிகழ்வில் பிரதம அதிதியாக 23ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் டி.டி.யு.கே.ஹெட்டியாராய்ச்சி கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதைகளை ஏற்றுக் கொண்டதுடன் பயிற்ச்க்காலத்தில் சிறந்து விழங்கிய இராணுவ வீரர்களுக்கான நினைவுச் சின்னங்களையும் வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வில் 24ஆவது இராணுவ படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ரோகன பண்டார, 231ஆவது இராணுவ படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் பாலித பெர்ணான்டோ, 232ஆவது இராணுவ படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கேர்ணல் ரவீந்திர டயஸ், 233ஆவது இராணுவ படைப்பிரிவின் கட்டளை அதிகாரி நந்த கத்துருசிங்க உள்ளிட்ட இராணுவ உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

மூன்றரை மாத பயிற்சிகளை நிறைவு செய்த இராணுவ வீரர்களில் 367 சிங்கள இளைஞர்களும் 31 தமிழ் இளைஞர்களும் 07 முஸ்லிம் இளைஞர்களும் அடங்களாக 405 இராணுவ வீரர்கள் பயிற்சியை பூர்த்தி செய்துள்ளனர்.
கொட்டும் மழையில் நடைபெற்ற பயிற்சி நிறைவு நாள் அணிவகுப்புகளின் போது இராணுவத்தில் இணைந்து கொண்டவர்களின் பெற்றோர்களும் உறவினர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
SHARE

Author: verified_user

0 Comments: