9 Dec 2014

விபத்தில் ஒருவர் மரணம்.

SHARE
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் இன்று (09.12.2014) மதியம் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் ஆட்டோவில் மோதுண்டதில் இளைஞர் ஒருவர் உயிர் இழந்துள்ளதுடன் இரண்டு இளைஞர்கள் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை ஓட்டமாவடி – காவத்தமுனை பிரதேசத்தில் இருந்து மூக்கர்ரகல் வயல் பிரதேசத்திற்கு இரண்டு மோட்டார்சைக்கிள்களில் மூன்று இளைஞர்கள் பயனித்துக் கொண்டிருக்கும் போது ஜப்பார்ரதிடல் பிரதேசத்தில் வைத்து மோட்டார் சைக்கிளில் சென்றவர்களுக்கு நாய் ஒன்று குருக்கருக்கவும் சைக்கிள் எதிரேவந்த ஆட்டோவில் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரனைகளில் இருந்து தெரிய வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவத்தில் காவத்தமுனை பாடசாலை வீதியைச் சேர்ந்த றம்ளார் முஹம்மட் ரிப்கான் (வயது – 22) என்பவர் ஸ்தலத்திலயே உயிர் இழந்துள்ளதுடன் காவத்தமுனையைச் சேர்ந்த அப்துல் மஜீட் ரிஸ்கான் (வயது – 21) வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் காவத்தமுனையைச் சேர்ந்த அசனார் றிப்னாஸ் (வயது – 15) என்பவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக ஆட்டோ சாரதி வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்துள்ளதுடன் மரணமடைந்த றம்ளார் முஹம்மட் ரிப்கானின் ஜனாஸா வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன்; இவ் விபத்துத் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரனைகளை நடாத்தி வருகின்றனர்.
SHARE

Author: verified_user

0 Comments: