26 Dec 2014

நாட்டின் தென்கிழக்கு தாழமுக்கத்தினால் தொடர்ந்து மழை பெய்யலாம்?

SHARE
நாட்டின் தென்கிழக்கு கடலோரங்களில் ஏற்பட்ட தாழமுக்கத்தினால் தொடர்ந்து சில நாட்களுக்கு அனைத்து பாகங்களிலும் மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இத்தாழமுக்க காரணத்தினால் இன்று (26) நாட்டின் அனைத்து பாகங்களிலும் அதிக மழை பெய்யலாம் எனவும் தொடர்ந்து இலங்கை நோக்கி தாழமுக்கம் ஏற்பட்டால் நாளையிலிருந்து காற்றுடன் கூடிய அதிக மழை பெய்யும் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இம்மழைவீழ்ச்சியினளவு 150 மில்லி மிற்றரைத் தாண்டலாம். காற்று 60 -80 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

பிரதான நகரங்களின் காலநிலை

அநுராதபுர மாவட்டத்தில் வெப்ப நிலையானது ஆகக்கூடியது 26  செல்சியஸ் பாகையாகவும் ஆகக் குறைவான வெப்பநிலை 21 செல்சியஸ் பாகையாகவும் காணப்படுவதோடு சிறிதளவிலான மழைக்கான காலநிலை காணப்படலாம்.  யாழ்ப்பாண மாவட்டத்தில்  ஆகக்கூடியது 26 செல்சியஸ் பாகையாகவும்  ஆகக் குறைவான வெப்பநிலை 23  செல்சியஸ் பாகையாகவும்  காணப்படும்  அதேவேளை யாழ்ப்பாணம் -  மன்னார் ஆகிய பிரதேசங்களிலும் சிறிதளவிலான மழைவீழ்ச்சிக்கான சாத்தியம் காணப்படும் .

மட்டக்களப்பில் ஆகக்கூடுதலான வெப்பநிலையாக 25 செல்சியஸ்  பாகையாகவும் ஆகக் குறைவான வெப்பநிலை 21 செல்சியஸ்பாகையாகவும் காணப்படும் அதேவேளை சில பகுதிகளில் குறைந்த மழைக்கான சாத்தியம் காணப்படும்.  கொழும்பு மாவட்டத்தில் ஆகக்கூடுதலான வெப்பநிலை 26 செல்சியஸ் பாகையாகவும் ஆகக் குறைவான வெப்பநிலை 21 செல்சியஸ் பாகையாகவும்  காணப்படுவதோடு இரவில் அதிக மழை பெய்யலாம்.

கண்டி நுவரெலியா இரத்தினபுரி கொழும்பு காலி மாவட்டங்களில்  சிறிதளவிலான மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.  நாட்டில்  ஆகக்கூடிய வெப்பநிலையாக அநுராதபுர மாவட்டத்தில் 13.4 செல்சியஸ்பாகையும் குறைந்தளவு வெப்பநிலையாக  நுவரெலியா  மாவட்டத்தில் 13.9 செல்சியஸ் பாகையும் காணப்படுகிறது.

ஆகக்கூடியளவு மழைவீழ்ச்சி பதிவாகிய பிரதேசம்

பொவற்றானா பிரதேசத்தில் ஆகக்கூடியளவு மழைவீழ்ச்சியாக 184.4 மி.மீற்றர் பதியப்பட்டுள்ளது.(nl)
SHARE

Author: verified_user

0 Comments: