தேசிய பாதுகாப்பு தினம் நாடு முழுவதிலும் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தைத் தொடர்ந்து 10 வருடமாக டிசம்பர் 26ஆம் திகதி தேசிய பாதுகாப்பு தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.
இதனையொட்டி இன்றைய தினம் காலை 9.25 மணி
முதல் 9.27 மணி வரை இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த
முகாமைத்துவ அமைச்சு கேட்டுள்ளது.தேசிய பாதுகாப்பு தினத்தின் பிரதான வைபவம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஹம்பாந்தோட்டையில் நடைபெறுகிறது.
ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவிருக்கும் தேசிய நிகழ்வு ‘பாதுகாப்பான இலங்கையில் அனர்த்தத்தை ஒழிப்பதற்கு அனைவரும் ஒன்றிணைவோம்’ என்ற தொனிப்பொருளில் நடைபெறுகிறது.
இது மட்டுமன்றி, நாடு முழுவதிலும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. காலி, இரத்தினபுரி, கண்டி, குருநாகல், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, பதுளை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
2004ஆம் ஆண்டு 26ஆம் திகதி சுனாமி அனர்த்தத்தால் இலங்கையில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியானதுடன் பெரும் எண்ணிக்கையான சொத்துக்கள் அழிக்கப்பட்டன. சுனாமிப் பேரலைத் தாக்கத்தால் உயிர்நீத்தவர்களின் ஆத்மசாந்திக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று மதவழிபாடுகள் நடைபெறவுள்ளன.(nl)

0 Comments:
Post a Comment