12 Dec 2014

முஸ்லிம் தலைமைகளை உண்மையின் பக்கம் அழைக்கின்றோம்

SHARE
 தற்போதுள்ள அரசில் இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களும் தமிழர்களும் பாரிய துன்பியல் நிலைமையை அனுபவித்துவருவதாகவும் அவ்வாறான நிலையை உணர்ந்து முஸ்லிம் மக்களும் ஏனைய மக்களும் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க அணியணியாக முன்வந்து கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம் சமூகத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களும் இணைந்து வெற்றியிலும் நாட்டைப் பாதுகாக்கும் பணியிலும் இணைந்து கொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினரான ஆஸாத் சாலியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.எம்.மஹ்றுப்பும் அறைகூவல் விடுத்தனர்.
ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்து அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்புக்களின் ஒரு அங்கமாக, சாய்ந்தமருதிலும் இடம்பெற்றது.
சாய்ந்தமருது முஸ்லிம் வர்த்தக சமூகத்தின் ஏற்பாட்டில் அதன் அமைப்பாளா் ஏ.ஆர்.எம்.அசீம் தலைமையில் சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்திலநேற்று்  (11) இடம்பெற்ற கூட்டத்தின் போதே மேற்கண்ட அறைகூவலை விடுத்தனர்.
இக்கூட்டத்திற்கு பொது வேட்பாளா் மைத்திரிபால சிறிசேனவுடைய சகோததரான அரலிய அரிசி ஆலையின் உரிமையாளர் டட்லி சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினரான ஆஸாத் சாலி, முன்னாள் பாராளமன்ற உறுப்பினர் எம்.ஏ.எம்.மஹ்றுப், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மஞ்சுள பெர்னாண்டோ, கல்முனை மாநகர சபையின் உறுப்பினர் ஏ.எச்.எச்.எம் நபார் ஆகியோர் கலந்து கொண்டனா். (ml)
 
 
SHARE

Author: verified_user

0 Comments: