17 Dec 2014

மட்டக்களப்பு மாவட்ட சோட்டாக்கன் கராத்தே சங்கம் நடாத்திய மாபெரும் கராத்தே சுற்றுப்போட்டி

SHARE
மட்டக்களப்பு மாவட்ட சோட்டாக்கன் கராத்தே சங்கம் நடாத்திய மாபெரும் கராத்தே சுற்றுப்போட்டி மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்தின் கராத்தே சுற்றுப்போட்டியின் வரலாற்றில் மாபெரும் சம்பியன் சுற்றுப்போட்டியாக இந்த போட்டி நடத்தப்பட்டது.
விசேடமாக இந்த சுற்றுப்போட்டியில் பெருமளவிலான பாடசாலை மாணவிகள் பங்குகொண்டமை சிறப்பம்சமாகும்.

ஆண்கள்இ பெண்கள் பிரிவாக வயதின் அடிப்படையில் மூன்று பிரிவாக நடத்தப்பட்ட இந்த சுற்றுப்போட்டியில் 500க்கும் மேற்பட்ட வீரவீராங்கனைகள் பங்குகொண்டனர்.

இதன்பின்னர் இறுதியாக பரிசளிப்பு விழா மட்டக்களப்பு மாவட்ட சோட்டாக்கன் கராத்தே சங்கத்தின் தலைவரும் பிரதம பயிற்றுவிப்பாளருமான கே.ரி.பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில்இ கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை பணிப்பாளர் மதிவண்ணன்இ மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஈஸ்பரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போதுஇ வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்களும் பதக்கங்களும் அதிதிகளால் அணிவிக்கப்பட்டதுடன்இ மட்டக்களப்பு மாவட்ட சோட்டாக்கன் கராத்தே சங்கத்தில் பயிற்சியை நிறைவு செய்து பயிற்சியாளர் பயிற்சிகளையும் நிறைவு செய்தவர்களுக்கான பயிற்சியாளர் அடையாள அட்டைகளும் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பெருமளவான பெற்றோர் கலந்துகொண்டதுடன் கலை நிகழ்வுகளும் நடத்தப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.



SHARE

Author: verified_user

0 Comments: