மட்டக்களப்பு மாவட்டதில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இதனால் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் இயல்பு வாழ்வில் சற்று தழம்பல் ஏற்பட்டுள்ளதுடன் பாதிப்புக்களும் ஏற்பட்டுள்ளன.
மழை வெள்ளத்தினால் பல கிராமங்களின் உள் வீதிகளின் போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பிரதான வீதிகளை ஊடறுத்தும் வெள்ளநீர் பாய்வதனால் பிரதான போக்குவரத்துக்களிலும் சிரமம் ஏற்பட்டுள்ளன.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று ஞாயிற்றுக் கிழமை (21) இருந்த நிலமையினைவிட திங்கட் கிழமை(22) அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் சற்று முன்னர் அறிவித்துள்ளது.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 225 கிராம சேவையாளர் பிரிவுகளில், 88925 குடும்பங்களைச் சேர்ந்த 322416 நபர்கள் பாதிக்கப் பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று ஞாயிற்றுக் கிழமை (21) இருந்த நிலமையினைவிட திங்கட் கிழமை(22) அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் சற்று முன்னர் அறிவித்துள்ளது.
மேலும் மாவட்டத்திலல் 7794 குடும்பங்களைச் சேர்ந்த 27608 நபர்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.
இவ்வாறு இடம்பெயர்ந்தவர்கள் மாவட்டத்தின் ஆங்காங்கே காணப்படுகின்ற பொதுக்கட்டிடங்களில் 78 நலம்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவற்றினைவிட 31431 குடும்பங்களைச் சேர்ந்த 113776 நபர்கள் வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்து அவர்களது நண்பர்கள் உறவினர்களின் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.
நலம்புரி நிலையங்களில் தங்க வைக்கப் பட்டுள்ள மக்களுக்கு உரிய பிரதேச செயலகங்கள் ஊடாக சமைத்த உணவுகள் வழங்கப் பட்டு வருகின்றன,
வெள்ள அனர்தம் காரணமாக இதுவரையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர், எனவும் 32299 குடும்பங்களைச் சேர்ந்த 63978 பேர் மட்டக்களப்ப மாவட்த்தில் வாழ்வாதார ரீதியாகவும் பாத்திப்படைந்துள்ளதாக மேற்படி மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment