11 Dec 2014

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தபோது தமிழ் மக்களுக்காக வேண்டி ஒஸ்லோவிற்குச் சென்று பேச்சுவார்த்தை நடாத்தினேன்….

SHARE
2002 ஆம் ஆண்டு நான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தபோது தமிழ் மக்களுககாக வேண்டி ஒஸ்லோவிற்குச் சென்று அப்போதிருந்த இலங்கை அரசினை அழைத்து பேச்சுவார்த்தை  நடாத்தினேன். என மீழ்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்…

மட்டக்களப்பு மாவட்டம் போரதிவுப்பற்று பிரதேச செயலளர் பிரிவுக்குட்பட்ட மக்களுக்கு திவிநெகும திணைக்களத்தினூடாக “செழிப்பான இல்லம்” எனும் செயற்றிட்டத்தின் கீழ் திவி நெகும பயனாளிகளுக்கு வீடு திருத்துவதற்காக  2500 ரூபாய் முதற் கட்ட நிதியினை  புதன் கிழமை திக்கோடை கணேச வித்தியாலயத்தில் வைத்து வழங்கிவிட்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்…..

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல உட்கட்டுமான அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகின்றோம் அதுபோல் இம்மாவட்ட மக்களின் வாழ்வாதாரங்ளையும் மேம்படுத்துவதற்கு பல வேலைத் திடங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.  வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காகத்தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச திவிநெகும திணைக்களத்தனூடாக வாழ்வின் எழுச்சித் திட்டத்தினைக் அறிமுகப் படத்தியுள்ளார், இத்திடத்தினூடாக குறைந்த வட்டி வீத்தில் கடன் வசத்திகள், தொழில் உபகரணங்கள் வழங்கல், போன்ற பல உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

இதனைவிட இந்த மாவட்ட மக்களின் நலன் கருத்தி ஆயிரம் பாடசாலைகள் திட்டத்தின் கீழ் 24 பாடசாலைகள் தெரிவு செய்யப் பட்டுள்ளன, நனசல திட்டத்தின் கிழ் 14 பாடசாலைகளும், இதனைவிட மஹிந்தோதைய திட்டத்தின கீழ் 5 பாடசாலைகளும். தெரிவு செய்யப்பட்டு அபிவிருத்திகள் நடைபெற்று வருகின்றன, நிர்ப்பாசன வசதி. உரமானியம், அரச உத்தியோகஸ்தர்களுக்கு சம்பள உயர்வு, உட்பட இம்மாவட்ட மக்களின் அனைத்து விடையங்களுக்கும் இந்த அரசு உதவி செய்து கொண்டு வருகின்றது.

கடந்த 5 வருடங்களுக்குள் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தினூடாக மாத்திரம், 61 கோடி ரூபாய் நிதி இப்பிரதேச அபிவிருத்திகளுக்காக செலவு செய்யப் பட்டுள்ளது. இதனைவிட மின்சாரம், நீர்ப்பாசம் போன்றவற்றிற்கு விசேட திட்டத்தினூடாக பல கோடிக்கணக்கான நிதி இப்பிரதேசத்தில் செலவு செய்யப்பட்டுள்ளது.

2002 ஆம் ஆண்டு நான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தபோது தமிழ் மக்களுக்காக வேண்டி ஒஸ்லோவிற்குச் சென்று அப்போதிருந்த இலங்கை அரசினை அழைத்து பேச்சுவார்த்தை  நடாத்தினேன். அவ்வாறு பல பேச்சுவார்தைகள் நடாத்தியபோதும் இறுதியில் எதுவும் நடைபெற்றதாக இல்லை.

இவைகள் போன்ற பல காரணங்களுக்காக வேண்டித்தான் நான் தானாகவே உணர்ந்து இந்த யுத்தத்தினை நிறுத்தினேன். நான் அப்போது யுத்தத்தினை நிறுத்தாமல் விட்டிருந்தால் இப்போது இருக்கும் எமது தமிழ் இளைஞர் யுவதிகள், இல்லாமல் போயிருப்பார்கள்.

எனவே தற்போதைய காலகட்டத்தில் இப்போதிருக்கின்ற அரசாங்கதைப் பலப்படுத்தி நாங்கள் அனைவரும் நன்மையடைய வேண்டும்.  இந்த விடையத்தில் எமது தமிழ் மக்கள் மிகவும் அவதானமாகச் சிந்தித்துச் செயற்பட வேண்டும்.

இலங்கையிலே இருக்கின்ற தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் ஆளும் கட்சியில் 25 பாராளுமன்ற உறுப்பினர்களை நாம் உருவாக்கிவிடலாம்.

ஆகவே கடந்தமுறை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 60 ஆயிரம் வாக்குகள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டன அவைகள் அனைத்தும் இந்த மாவட்டத்திலிருக்கின்ற முஸ்லிம் மக்களால் அளிக்கப்பட்ட வாக்குகளாகும்.

எமது மக்கள் கடந்த தேர்தல்களில் எதிர்தரப்புக்கு வாக்களித்தது போலல்லாமல் இம்முறை வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்சவுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும். என அவர் மேலும் தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: