18 Dec 2014

தற்காலிக அடையாள அட்டை வழங்குவதற்கு நடவடிக்கை

SHARE
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு வாக்களிக்கவுள்ளவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு, தற்காலிக அடையாள அட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அட்டாளைச்சேனை  பிரதேச செயளாலர் ஐ.எம்.ஹனீபா செவ்வாய்க்கிழமை (16) தெரிவித்தார்.
 
தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம், அரச சேவை ஓய்வூதிய அடையாள அட்டை, முதியோர் அடையாள அட்டை, ஆட்பதிவு திணைக்களத்தினால் மதகுருமார்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள அடையாள அட்டை போன்ற மேற்குறிப்பிட்ட அட்டைகளில் ஏதேனும் ஒன்றுகூட இல்லாதவர்கள், தேர்தல்கள் திணைக்களத்தினால் விநியோகிக்கப்படவுள்ள தற்காலிக அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தற்காலிக அடையாள அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தை தத்தமது கிராம சேவை அதிகாரிகளிடம் இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைத்தல் அவசியம்.
தெளிவில்லாத அடையாள அட்டைகள், அமைச்சுகளால் அல்லது திணைக்களங்களினால் மற்றும் அரச நிறுவனங்களினால் விநியோகிக்கப்பட்டுள்ள  அலுவலக அடையாள அட்டைகள் அல்லது வேறெந்த ஆவணமும் வாக்கெடுப்பு நிலையத்தில் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாதெனவும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
 
SHARE

Author: verified_user

0 Comments: