21 Dec 2014

நந்தவனம் சமூகசேவைகள் நலன்புரி அமைப்பின் புதிய நிருவாக சபை உறுப்பினர்கள் தெரிவு.

SHARE
கமல் -
களுவாஞ்சிக்குடி பிரதேச முதியோர்களை பராமரித்து வரும் அமைப்பான நந்தவனம் சமூகசேவைகள் நலன்புரி அமைப்புக்கான புதிய நிருவாகசபைத் தேர்வு நேற்று ஞாயிற்றுக் கிழமை (20) மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர எம்.கோபாலரெத்தினம் தலைமையில் பிரதேச செயலாக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இவ் அமைப்பினால் பராமரிக்கப்பட்டுவரும் நந்தவன முதியோர் இல்லத்தில் வசித்துவரும்  பிரதேச முதியோர்களின் நலன்கருதியும், அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் முகமாகவும், வினைத்திறனுடனான செயற்பாட்டினை முன்னெடுக்க வேண்டிய தேவையினை கருத்தில் கொண்டு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களம் இப் புதிய நிருவாகசபைத் தேர்வுக்கான அறிவுறுத்தலை வழங்கியிருந்தது.

இதற்கமைய இடம் பெற்ற இக் கூட்டத்தின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை அவர்களும் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் சார்பாக மாவட்ட சமூகசேவைகள் உத்தியோகத்தர் எஸ். அருள்மொளி பிரதேச சமூகசேவை உத்தியோகத்தர் கே.சிவகுமார் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது நந்தவனம் சமூகசேவைகள் நலன்புரி அமைப்பின்
புதிய நிருவாக சபைத் தலைவராக அ.கந்தவேள்(களுவாஞ்சிகுடி கிராமத் தலைவர்) உப தலைவர் வே.தவராசா(சமதான நீதவான்) செயலாளராக ச.பேரின்பநாயகம் (சமாதான நீதவான்) உப செயலாளராக க. சந்திரசேகரம்(சமாதான நீதவான்) பொருளாளராக  ஜி.சுகுணன்( வைத்திய அத்தியட்சகர்) மற்றும் நிருவாக சபை உறுப்பினர்கள் ஒவ்வொரு கிராமத்தில் ஒருவரும் தெரிவு செய்யப்பட்டதுடன்.

மேலும் இவ் அமைப்பின் ஆலோசகர்களாக பிரதேச செயலாளர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர், ஐ.சுப்பிரமணியம்(ஓய்வு பெற்ற நிருவாக உத்தியோத்தர்) மற்றும் கணக்காய்வாளராக எஸ். கிருஸ்ணன்(ஓய்வு பெற்ற அதிபர்) அவர்களும் உத்தியோக பூர்வமாக  தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.
SHARE

Author: verified_user

0 Comments: