கடந்த சில நாட்களாக பெய்து வருகின்ற அடைமழை காரணமாக கல்முனைப்
பிராந்தியத்தில் வெள்ள அபாயத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு கல்முனை மாநகர
சபையின் சுகாதார மற்றும் வேலைப் பகுதி ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளும்
ரத்து செய்யப்பட வேண்டுமென கல்முனை மாநகர முதல்வர் சட்டமுதுமாணி எம்.நிஸாம்
காரியப்பர் சனிக்கிழமை (20) மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலிக்கு
பணித்துள்ளார்.தற்போது தொடர்ச்சியாக பெய்து வருகின்ற மழையினால் ஏற்படக்கூடிய வெள்ள அபாயத்திலிருந்து கல்முனைப் பிராந்தியத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முதல்வர் நிஸாம் காரியப்பர் தலைமையில் உயர்மட்டக் கூட்டமொன்று நடாத்தப்பட்டு சில தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இதன் பிரகாரம் வெள்ள அபாய முற்பாதுகாப்பு நடவடிக்கைகளை, கல்முனை மாநகர சபை நேர்த்தியாக மேற்கொண்டு வந்ததாகவும் இதனால் தற்போது பெய்து வருகின்ற மழையினால் கல்முனைப் பிராந்தியத்தில் வெள்ள அனர்த்தப் பாதிப்புகள் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும் மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், எதிர்வரும் நாட்களில் எமது பணியை மேலும் பலப்படுத்தி அனைத்து பிரதேசங்களிலுள்ள மக்களையும் வெள்ள அபாயத்தில் இருந்து முழுமையாக பாதுகாக்கப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக மாநகர சபையின் சுகாதார மற்றும் வேலைப் பகுதி ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளையும் மறு அறிவித்தல் வரை ரத்து செய்யுமாறு முதல்வர் பணிப்புரை விடுத்திருப்பதாக ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment