26 Dec 2014

கொட்டும் மழையிலும் சுனாமியின் பத்தாண்டு நிகழ்வில் உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி

SHARE


(தில்லை)
2004ஆம் ஆண்டு மார்கழி மாதம் 26ஆம் திகதியன்று இந்த நாட்டையே ஒரு கனம் உழுக்கிய சம்பவமானது பத்து வருடங்கள் கழிந்தும் இன்னும் உறவுகளின் நெஞ்சங்களில் இருந்து மாறவில்லை

என்பதற்கு இன்று கொட்டும் மழையிலும் இறந்த உறவுகளுக்காக வேண்டி அஞ்சலி செலுத்தப்பட்டதில் இருந்து அறியமுடிகின்றது.

இன்றுடன் பத்து வருடங்கள் சுனாமி என்ற கொடிய அரக்கனினால் கல்முனை மாமாங்கப்பிள்ளையார் ஆலயத்திலே அறநெறி கற்பதற்காக சென்றிருந்த சிறு பிஞ்சுகளையும் அவர்களை கற்பித்துக்கொண்டிருந்த ஆசிரியர்களையும் தங்களது வீடுகளில் இருந்தவர்களையும் எந்த ஈவிரக்கமும் இன்றி சுனாமி அலை அடித்துக்கொண்டு சென்றது.

இன்றும் கனவாக இருக்கின்றது என இறந்த உறவுளை நினைத்து நினைவு கூறுவதனையும் காணமுடிகின்றது. நாட்டில் பல பாகங்களிலும் சுனாமியின் தாக்கம் காணப்பட்டபோதும் அதிகளவு தாக்கத்திற்கு உள்ளான பிரதேசமாக கல்முனை பிரதேசம் இருந்தது.










SHARE

Author: verified_user

0 Comments: