மட்டக்களப்பு மாவட்ட மக்கள் 1978 ஆம் ஆண்டிலிருந்து எமது பக்கமே உள்ளார்கள் பின்னர் 1984 ஆம் ஆண்டு காலப் பகுதியில் பல்வேறுபட்ட பிரச்சனைகள் காரணமாக சற்று தழம்பல் ஏற்பட்டது தற்போது மீண்டும் இம்மாவட்ட மக்கள் எமது பக்கம் வந்துள்ளார்கள்.
என ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும், அக்கட்சியின் தலைமைத்துவ சபையின் மட்டக்களப்பு மாவட்ட தவிசாளருமான அரசரெட்ணம் சசிதரன் கூறினார்.
ஐக்கிய தேசிக் கட்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கவுள்ள தேர்தல் நடவடிக்கைகள் குறித்து இன்று திங்கட் கிழமை (08) அவரிடம் தொடர்பு கொண்டு கேட்போதே அவர் இவ்வாறு கூறினார்…..
இவ்வியைடம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிகையில்…..
மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும், 10 ஆம் திகதியிலிருந்து எமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முனெடுக்கவுள்ளோம். எமது பிரச்சார நடவடிக்கைள் அடிமட்ட மக்கள் முதல் மாவட்டம் தழுவிய ரீதியில் முன்னெடுப்பதற்குத் திட்டமிட்டுள்ளோம்.
எது எவ்வாறு அமைந்தாலும் கடந்த வருடங்களில் நடைபெற்ற பல தேர்தல்களின் அடிப்படையில் பல வன்முறைச் சம்பவங்கள் மட்டக்களப்பில் பதிவாகியுள்ளன. அதுபோல் இம்முறையும் எமது பிரச்சாரத்தைப் பொறுக்காத சிலர் எம்மீது வன்முறைகளைப் பிரயோகிக்கலாம் எனவும், நாங்கள் எதிர் பார்க்கின்றோம்.
இருந்தாலும் எம்மை யாராவது வேண்டுமென்றே வன்முறைகளுக்கு இழுப்பார்களேயானால் நாங்களும் பதிலடிகொடுப்போம், ஆனால் என்னைப் பெறுத்த வரையில் எமது கட்சி சார்பாக எவரும் வன்iமுறைகளில் ஈடுபடமல் பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்குத் திடமிட்டுள்ளோம்.
பொலிசாரும், தேர்த்தல் ஆணையாரும் சரியான முறையில் செயற்பட்டால் தேர்தல் வன்முறைகள் என்ற பதத்திற்கே இடம் இல்லாமல் போய்விடும். ஆனால் பொலிசாரும், தேர்த்தல் ஆணையாரும் அவர்களது கடமைகளில் சரியான முறையில் செயற்படுவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. இவற்றினையும் மீறி அவர்கள் பிளையான வழியில் நடந்தால் நாங்களும் பிளையான வழியில் செயற்பட வேண்டிவரும். இந்த ஜனாதிபதித் தேர்தலைப் பெறுத்த வரையில் அனைத்திற்கும் துணிந்து செயற்படுவதற்குத் தயாராகவுள்ளோம்.
கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டக்களப்பு மாவட்ட மக்களை ரணில் விக்கிரம சிங்கவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று உத்தரவிட்டபோதும் அப்போது 122000 இற்கு மேற்பட்ட வாக்குகளை இந்த மாவட்ட மக்கள் ரணில் விக்கிரம சிங்கவுக்கு அளித்திருந்தனர். அந்த வகையில் இம்முறை நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்திலில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் எமது பக்கம் இருப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.
எமது கட்சி சார்ந்த தலைவர்கள் மற்றும் பொது வேட்பாளர் மைத்திரிபால சறிசேன, உள்ளிட்ட குழுவினர் இந்த மாதம் மட்டக்களப்புக்கு வருகை தரவுள்ளனர். அதற்குரிய திகதி இன்னும் தீர்மானிக்கப் படவில்லை மட்டக்களப்பிலே மாபெரும் பொதுக் கூட்டம் ஒன்றையும் நடாத்த தீர்மானித்துள்ளோம்.
மட்டக்களப்பு மக்கள் இலங்கையில் ஆட்சி மாற்றம் வேண்டும் என நினைத்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள் தற்போது காலம் கனிந்துள்ளது. கடந்த தேர்தலிகளில் வாக்களித்த வீதத்தினைவிட இம்முனை மட்டக்களப்பு மக்கள் அதிகூடிய அளவு வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கின்றோம், என்றென்றும் மட்டக்களப்பு மக்கள் எங்கள் பக்கம்தான் உள்ளார்கள்.
மட்டக்களப்பு மாவட்ட மக்கள் 1978 ஆம் ஆண்டிலிருந்து எமது பக்கமே உள்ளார்கள் பின்னர் 1984 ஆம் ஆண்டு காலப் பகுதியில் பல்வேறுபட்ட பிரச்சனைகள் காரணமாக சற்று தழம்பல் ஏற்பட்டது தற்போது மீண்டும் இம்மாவட்ட மக்கள் எமது பக்கம் வந்துள்ளார்கள்.
இலங்கையிலே தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற கொடூர ஆட்சிக்கு வருகின்ற ஜனாதிபதித் தேர்தல் மூலம் மட்டக்களப்பு மாவட்டம்வாழ் தமிழ் பேசும் மக்கள் நல்ல பாடம் புகட்டவுள்ளனர். என்பது உறுதிப்படுத்தப்பட்ட உண்மையாகும். இது ஒரு எழுச்சிமிக்கதாகவும், புரட்சி மிக்கதாகவும், காணப்படும் என்பதில் எமக்கு மிகுந்த நம்பிக்கையுள்ளது. என அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment