3 Dec 2014

இன்று சர்வதேச வலது குறைந்தோர் தினம்.

SHARE
இன்று சர்வதேச வலது குறைந்தோர் தினமாகும். வலது குறைந்தோரின் உரிமைகளை வலியுறுத்தும் நோக்கில், ஐக்கிய நாடுகள் சபை 1992ஆம் ஆண்டு முதல் இத்தினத்தை பிரகடனப்படுத்தியது.
இத்தினமானது இம்முறை ‘தொழிநுட்பமின்றி பாரிய அபிவிருத்தி இல்லை’ என்ற தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றது.
இந்த ஊர்வலத்தில் சென்ற மாற்றுத்திறனாளிகள், ‘வலது குறைந்தோர் கற்பதற்கு தடையில்லை’, ‘கண்ணிழந்தவர்களும் கணனியில் நிபுணர்கள்’ ‘அனர்த்தங்களின் போது பாதிக்கப்படுவோருக்கு உதவுவோம்’ போன்ற வசனங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை தாங்கியிருந்தனர்.
மட்டக்களப்பு காந்தி சதுக்கத்திலிருந்து ஆரம்பமான இந்த ஊர்வலம், மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபம் வரை சென்றதுடன் அங்கு கண்காட்சி மற்றும் கலை நிகழ்வுகள் நடைபெற்றன.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா உட்பட சமூகசேவைகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு உத்தியோகஸ்தர் அருள்மொழி அதன் அதிகாரிகள், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், விசேட தேவையுடையோரின் பாடசாலைகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது மாற்றுத்திறனாளிகளின் உற்பத்திகள் கொண்ட கண்காட்சியினையும் அதிதிகள் பார்வையிட்டதுடன் புகைப்படக்கண்காட்சியினையும் அதிதிகள் பார்வையிட்டனர்.
தேசிய போட்டிகளில் வெற்றிபெற்ற மாற்றுத்திறனாளிகள் இதன்போது கௌரவிக்கப்பட்டதுடன் பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.

 
SHARE

Author: verified_user

0 Comments: