21 Dec 2014

கிட்டங்கி தாம்போதியின் மேலாக வெள்ளம்

SHARE
அம்பாறை மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக பெய்து வரும் அடைமழை காரணமாக, நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கல்லோயா குடியேற்ற கிராமங்களையும் கல்முனை நகரையும் இணைக்கும் கிட்டங்கி தாம்போதியின் மேலாக இன்று ஞாயிற்றுக்கிழமை (21) காலை முதல் வெள்ளம் பாய்ந்து வருகிறது.

இதனால் அவ்வீதியூடான பொதுப் போக்குவரத்து துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

தினமும் விவசாயிகள், நாவிதன்வெளி பிரதேச செயலக 20 கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவிலுள்ள பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் இவ்வீதியால் பயணிக்கின்றனர்.

வெள்ளம் பாய்ந்து வருவதால் கல்லோயா குடியேற்றக் கிராமங்களிலுள்ள மத்தியமுகாம், மண்டூர் சவளக்கடை, சாளம்பைக்கேணி, 6ஆம் கொளனி, 12ஆம் கொளனி, 4ஆம் கொளனி, 15ஆம் கொளனி சொறிக்கல்முனை போன்ற கிராமங்களில் வாழும் மக்கள் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் தமது அன்றாட பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் காரணமாக மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இன்று காலை சற்று மழை ஓய்ந்திருந்த போதிலும் மீண்டும் இடையிடையே மழை பெய்து வருகின்றது.
SHARE

Author: verified_user

0 Comments: