22 Dec 2014

வயோதிபர் பலி

SHARE
திருகோணமலை, நிலாவெளி வீதியில், வயோதிபர் ஒருவர் மீது கெப் ரக வாகனமொன்று மோதியதில் அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்த சம்பவமொன்று சனிக்கிழமை (20) இடம்பெற்றது.

உப்புவெளி, பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் இடம்பெற்ற இந்த விபத்தில், திருகோணமலை, எகெட் கரிற்றாஸ் நிறுவனத்தில் பாதுகாப்பு ஊழியராக கடமையாற்றும் செல்லத்துரை மரியதாஸ் (வயது 63) என்பவரே உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு, இருதயபுரம் பகுதியைச் சேர்ந்த இவர் தொழில் நிமித்தம் பாலையூற்றில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளார்.

திருகோணமலை, பதில் நீதவான் தி.திருச்செந்தில்நாதன், ஞாயிற்றுக்கிழமை (21) வைத்தியசாலைக்குச் சென்று சடலத்தை பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனை செய்து மன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்து, சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

மேலும் வயோதிபர் உயிரிழந்தமைக்கு காரணமாகவிருந்த கெப் வாகனத்தின் சாரதியை கைது செய்து மன்றில் ஆஜர் செய்யுமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
SHARE

Author: verified_user

0 Comments: