மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வருகின்ற மழை வெள்ளம் காரணமாக இதுவரையில் 981 வீடுகள் முழு அளவிலும் 3874 வீடுகள் பகுதியளவிலும் சேதமைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகதாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
அந்த வகையில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 110 வீடுகள் முழு அளவிலும், 149 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன, கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 548 வீடுகள் முழு அளவிலும், 1333 வீடுகள் பகுதி அளவிலும் சேதமைந்துள்ளன, கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 2 வீடுகள் முழு அளவில் சேதமடைந்துள்ளன.
ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 241 முழு அளவிலும், 329 பகுதிகளிலும் சேதமடைந்துள்ளன, எறாவூர் நகர் பிரதேச செயலாளர் பிரிவில் 58 முழு அளவிலும், 757 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்தள்ளன. மண்முனை வடக்குப் பிரதெச செயலாளர் பிரிவில் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது,
காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 11 வீடுகள் முழுஅளவிலும், 1239 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்தள்ளன, மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு வீடு முழு அளவில் சேதமடைந்துள்ளது, மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 10 வீடுகள் முழு அளவிலும், 42 வீடுகள் பகுதியளவிலும் செதமடைந்தள்ளதுடன்,
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 24 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும், மட்டக்களப்பு மாவட்ட அனத்த முகதாமைத்துவப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment