மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து அடை மழை பெய்து வருகின்றது. இதனால் மாவட்டம் பூராகவும், மக்களின் இயல்பு நடவடிக்கைகளில் இஸ்த்தம்மிதம் அடைந்துள்ளதைக் காணக் கூடியதாகவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேசத்தில், சூரையடி, எருவில், மகிழூர், சாந்திபுரம், போன்ற பகுதிகளும், வெல்லாவெளி பிரதேசத்தில், பட்டாபுரம், பெரியபோரதீவு, வேத்துச்சேனை, ஆனைகட்டியவெளி. கோவில்போரதிவு, வீரஞ்சேனை, விபுலானந்தபுரம், போன்ற பகுதிகளும், ஆரையம்பதி பிரதேசத்தின், தர்மபுரம், கிரான்குளம், ஒல்லிக்குளம், பாலமுனை, மண்முனை, போன்ற பகுதிகளும், மட்டக்களப்பு நகர்ப் பகுதியில் அமைந்துள்ள நாவக்குடா, கல்லடி, நெச்சிமுனை, சத்திருக்கொண்டான், மாமாங்கம், போன்ற பகுதிகளும்,
பட்டிப்பளைப் பிரதேசத்தில் பண்டாரியவெளி, படையாண்டவெளி, அரசடித்தீவு, அம்பிளாந்துறை, முனைக்காடு, மதவைக்குடா, போன்ற தள்நிலப் பகுதிகளும்.
ஏறாவூர், செங்கலடி, ஏறாவூர் நகர், சித்தாண்டி, வந்தாறுமூலை, கிரான். வாழைச்சேனை, காத்தான்குடி, மற்றுமு; வாகரை போன்ற பிரதேசங்களிலுள்ள தாழ் நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இந்நிலையில் மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்குச் செல்லும் பிரதான வீதியின் பிள்ளையாரடி, வந்தாறுமூலை. மன்னம்பிட்டிய போன்ற போன்ற இடங்கிலும் வெள்ள நீர பாயவதனால் பிரதொன போ:குவரத்துககளிலும் ஸ்த்தம்பிதம் அடைந்துள்ளது.
இதனைவிட மட்டக்களப்பு பழுகாமம், போரதிவு வீதி, வவுணதீவு வீதி, வெல்லாவெளி மண்டூர் வீதி, காகாச்சுவட்டை சின்னவத்தை வீதி, ஆனைகட்டியவெளி மண்டூர் வீதி போன்ற வீதிகளும் வெள்ளத்தில் மூழ்யியுள்ளதனால் உள்ளுர் போகுவரத்துக்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்துடன் களுவாஞ்சிகுடியிலிருந்து பட்டிருப்பு பாலமூடாக ச் செல்லும் பட்டிருப்பு – படுவான்கரை வீதி முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதனால் இவ்வீதியுடனான படுவாக்கரைக்கான போக்குவரதது மற்றாகத் தடைப்பட்டுள்ளது.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின்
கோறளைப்பற்று வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவில் 16 கிராம சேவையாளர் பிரிவுகளிலுள்ள 7125 குடும்பங்களைச் சேர்ந்த 23910 குடும்பங்கள் பாதிக்கப் பட்டுள்ளதோடு, இப்பிரதேசத்தில் 12 இடைத்தங்கல் முகாம்களில் 587 குடும்பங்களைச் சேர்ந்த 1897 பேர் தங்க வைக்கப் பட்டுள்ளனர், இப்பிரதேசத்தில் 6138 குடும்பங்களைச் சேர்ந்த 20709 பேர் நண்பர்கள் உறவினர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.
கோறளைப் பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 8 கிராம சேவையாளர் பிரிவுகளிலுள்ள 640 குடும்பங்களைச் சேர்ந்த 2044 குடும்பங்கள் பாதிக்கப் பட்டுள்ளதோடு, இப்பிரதேசத்தில் 2 இடைத்தங்கல் முகாம்களில் 119 குடும்பங்களைச் சேர்ந்த 525 பேர் தங்க வைக்கப் பட்டுள்ளனர், இப்பிரதேசத்தில் 521 குடும்பங்களைச் சேர்ந்த 1519 பேர் நண்பர்கள் உறவினர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.
கோறளைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 12 கிராம சேவையாளர் பிரிவுகளிலுள்ள 6744 குடும்பங்களைச் சேர்ந்த 22753 குடும்பங்கள் பாதிக்கப் பட்டுள்ளதோடு, இப்பிரதேசத்தில் 4 இடைத்தங்கல் முகாம்களில் 91 குடும்பங்களைச் சேர்ந்த 249 பேர் தங்க வைக்கப் பட்டுள்ளனர், இப்பிரதேசத்தில் 2965 குடும்பங்களைச் சேர்ந்த 11048 பேர் நண்பர்கள் உறவினர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.
கோறளைப் பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் 9 கிராம சேவையாளர் பிரிவுகளிலுள்ள 5905 குடும்பங்களைச் சேர்ந்த 23254 குடும்பங்கள் பாதிக்கப் பட்டுள்ளதோடு, இப்பிரதேசத்தில் 1 இடைத்தங்கல் முகாம்களில் 76 குடும்பங்களைச் சேர்ந்த 234 பேர் தங்க வைக்கப் பட்டுள்ளனர், இப்பிரதேசத்தில் 2630 குடும்பங்களைச் சேர்ந்த 8793 பேர் நண்பர்கள் உறவினர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.
கோறளைப் பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 17 கிராம சேவையாளர் பிரிவுகளிலுள்ள 4257 குடும்பங்களைச் சேர்ந்த 16223 குடும்பங்கள் பாதிக்கப் பட்டுள்ளதோடு, இப்பிரதேசத்தில் 11 இடைத்தங்கல் முகாம்களில் 861 குடும்பங்களைச் சேர்ந்த 2857 பேர் தங்க வைக்கப் பட்டுள்ளனர்,
ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 28 கிராம சேவையாளர் பிரிவுகளிலுள்ள 10100 குடும்பங்களைச் சேர்ந்த 35753 குடும்பங்கள் பாதிக்கப் பட்டுள்ளதோடு, இப்பிரதேசத்தில் 16 இடைத்தங்கல் முகாம்களில் 1141 குடும்பங்களைச் சேர்ந்த 4040 பேர் தங்க வைக்கப் பட்டுள்ளனர், இப்பிரதேசத்தில் 1044 குடும்பங்களைச் சேர்ந்த 3662 பேர் நண்பர்கள் உறவினர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.
ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் பிரிவில் 17 கிராம சேவையாளர் பிரிவுகளிலுள்ள 9058 குடும்பங்களைச் சேர்ந்த 31442 குடும்பங்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்.
மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 1 கிராம சேவையாளர் பிரிவைச் சேர்ந்த 12 குடும்பங்களைச் சேர்ந்த 45 குடும்பங்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 27 கிராம சேவையாளர் பிரிவுகளிலுள்ள 7096 குடும்பங்களைச் சேர்ந்த 30395 குடும்பங்கள் பாதிக்கப் பட்டுள்ளதோடு, இப்பிரதேசத்தில் 301 குடும்பங்களைச் சேர்ந்த 891 பேர் நண்பர்கள் உறவினர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.
காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 18 கிராம சேவையாளர் பிரிவுகளிலுள்ள 8493 குடும்பங்களைச் சேர்ந்த 34075 குடும்பங்கள் பாதிக்கப் பட்டுள்ளதோடு, இப்பிரதேசத்தில் 2 இடைத்தங்கல் முகாம்களில் 30 குடும்பங்களைச் சேர்ந்த 95 பேர் தங்க வைக்கப் பட்டுள்ளனர், இப்பிரதேசத்தில் 3000 குடும்பங்களைச் சேர்ந்த 11721 பேர் நண்பர்கள் உறவினர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.
மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 13 கிராம சேவையாளர் பிரிவுகளிலுள்ள 359 குடும்பங்களைச் சேர்ந்த 1321 குடும்பங்கள் பாதிக்கப் பட்டுள்ளதோடு, இப்பிரதேசத்தில் 1 இடைத்தங்கல் முகாமில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 45 பேர் தங்க வைக்கப் பட்டுள்ளனர், இப்பிரதேசத்தில் 345 குடும்பங்களைச் சேர்ந்த 1276 பேர் நண்பர்கள் உறவினர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.
மண்முனை தென் மேற்கு பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 21 கிராம சேவையாளர் பிரிவுகளிலுள்ள 1219 குடும்பங்களைச் சேர்ந்த 5611 குடும்பங்கள் பாதிக்கப் பட்டுள்ளதோடு, இப்பிரதேசத்தில் 66 குடும்பங்களைச் சேர்ந்த 228 பேர் நண்பர்கள் உறவினர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 25 கிராம சேவையாளர் பிரிவுகளிலுள்ள 3762 குடும்பங்களைச் சேர்ந்த 13722 குடும்பங்கள் பாதிக்கப் பட்டுள்ளதோடு, இப்பிரதேசத்தில் 32 குடும்பங்களைச் சேர்ந்த 122 பேர் நண்பர்கள் உறவினர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.
போரதீவு பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 2 கிராம சேவையாளர் பிரிவுகளிலுள்ள 211 குடும்பங்களைச் சேர்ந்த 585 குடும்பங்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கபபட்டமக்களை அரச அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு வருவதுடன் நலம்புரி நிலையங்களில் தங்க வைக்கப் பட்டுள்ள மக்களுக்கு உரிய பிரதேச செயலகங்கள் ஊடாக சமைத்த உணவுகள் வழங்கப் பட்டு வருவதாகவும், மட்டக்களப்பு மாவட்ட அர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment