21 Dec 2014

திருகோணமலையில் 3,980பேர் பாதிப்பு

SHARE
வ.ராஜ்குமார்
திருகோணமலை மாவட்ட கடந்த இரண்டு நாட்களாக பெய்த கடும்மழை காரணமாக கந்தளாய் குளத்தில் இருந்து நீர் திறந்து விடப்பட்டதால் கந்தளாய், தம்பலகாமம் பிரதேச  செயலாளர் பிரிவின் 7 கிராம சேவகர் பிரிவிலுள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்களில் 1,122 குடும்பங்களைச் சேர்ந்த 3,980 பேர் 14 நலன்புரி நிலையங்களில் நேற்று சனிக்கிழமை (20) இரவு தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 836 குடும்பங்களைச் சேர்நத 3,051 பேர் இன்று தமது இருப்பிடங்களுக்கு திரும்பி உள்ளனர்.

மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கி உள்ளனர். இவர்களுக்கு  சமைத்த உணவு கிராம சேவையாளர்களால் வழங்கப்பட்டு வருகின்றது. பாதிக்;கப்பட்ட இடங்களை பிரதேச  செயலாளர்கள் பார்வையிடடு வருகின்றனர்.

தம்பலகாமம் ஆதிகோணேஸ்வரா மகா வித்தியாலயத்தில் தங்கி உள்ளவர்கள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெ.ஜனார்தனன் சென்று பார்வையிட்டுள்ளார். இன்று (21) மதியம் பொருளாhர அபிவிருத்தி  பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே  சென்று பார்வையிட்டார்.
SHARE

Author: verified_user

0 Comments: