22 Dec 2014

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக மழை வீழ்ச்சி பதிவு

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை காலை 8.30 மணியிலிருந்து நேற்று  திங்கட்கிழமை (22) காலை. 8.30 மணிவரையான கடந்த 24 மணிநேரத்துக்குள் வாகனேரியில் அதிகளவு மழை வீழ்ச்சியாக 145.2 மி.மீ மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பாளர் கே. சூரியகுமாரன் தெரிவித்தார்.


அதனடிப்படையில்  தும்பங்கேணி 104.7 மி.மீ, மட்டக்களப்பு 65.4 மி.மீ, நவகிரி 19.0 மி.மீ, வாகரை 72.2 மி.மீ, உன்னிச்சை 51.0 மி.மீ, றூகம் 64.4 மி.மீ, மயிலம்பாவெளி 59.8 மி.மீ, பாசிக்குடா 107.3 மி.மீ என மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.


மட்டக்களப்பு நகரம், தாழங்குடா மற்றும் புதுக்குடியிருப்பு மற்றும் கிரான்குளம் பகுதிகளில் குடியிருப்பகள் மற்றும் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்தோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக பலத்த மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
SHARE

Author: verified_user

0 Comments: