வெள்ளப்பெருக்கு காரணமாக மூழ்கியிருந்த வாகரை திருகோணமலை பிரதான வீதியில்
சென்ற இரண்டு பஸ்கள் இன்று (21) பாதையை விட்டு விலகி
விபத்துக்குள்ளாகியுள்ளன.
கல்முனையில் இருந்து திருகோணமலை நோக்கி சென்று கொண்டிருந்த பஸ்ஸூம்
திருக்கோயிலில் இருந்து திருகோணமலைக்கு சென்று கொண்டிருந்த பஸ்ஸூமே இவ்வாறு
ஒரே நேரத்தில் 50 மீற்றர் இடைவெளிகளில் வீதியை விட்டு விலகி சென்றுள்ளது.
இதன்போது எவருக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்பட்டவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
(10).jpg)
(8).jpg)
0 Comments:
Post a Comment