9 Dec 2014

SHARE
அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று 12ஆம் பிரிவில் ஏற்பட்ட மழை வெள்ளம்  காரணமாக 60 குடும்பங்களைச் சேர்ந்த 205 பேர் இடம்பெயர்ந்ததாக அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தெரிவித்தார்.

இவர்கள், அக்கரைப்பற்று கலாநிதி பதியுதீன் மஹூமூத் வித்தியாலத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அம்பாறை மாவட்டத்தில் திங்கட்கிழமையிலிருந்து (08) இடி, மின்னலுடன்  அடை மழை பெய்வதால்,
மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலுமுள்ள வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

மேலும், மழை காரணமாக விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள்;, கடற்றொழிலாளர்கள் உள்ளிட்டோரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களே  மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. பொத்துவில், திருக்கோவில், ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த நிலையில்,  மக்களை  அவதானத்துடன் இருக்குமாறும் அந்தந்தப் பிரதேச செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால், கடற்றொழிலாளர்களையும் அவதானத்துடன் செயற்படுமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இருப்பினும்,  வெள்ளநீர்; வடிந்தோடுவதற்கான நடவடிக்கைகள் பிரதேச சபைகளின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட நிலையில்,  முகத்துவாரங்களும் வெட்டப்பட்டு வெள்ளநீர் வடிந்தோடுவதற்கு வழியேற்படுத்தப்பட்டுள்ளது.
SHARE

Author: verified_user

0 Comments: