13 Dec 2014

23 வீடுகள் கையளிப்பு

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று  பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள களுவன்கேணி கிராமத்தில் சுவீடன் கூட்டுறவு நிறுவனத்தின் உதவியுடன் அமைக்கப்பட்ட 23 நிரந்தர வீடுகள் பயனாளிகளிடம்  வியாழக்கிழமை (11) கையளிக்கப்பட்டன.

போரினால் பாதிக்கப்பட்ட நிலையில் இலகுவில் பாதிப்படையக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட குடும்பங்களுக்காக  இந்த வீடமைப்புத்திட்டம் உருவாக்கப்பட்டதாக சுவீடன் கூட்டுறவு நிலையத்தின்  கிழக்கு மாகாண இணைப்பாளர் ரீ.மயூரன் தெரிவித்தார்.

இந்த வருடம் ஏப்ரல் மாதம் ஆம்பிக்கப்பட்ட இந்த வீட்டுத்திட்டம், 6  மாத காலப்பகுதியினுள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.  ஒவ்வொரு வீடும் தலா  7 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

இந்த நிகழ்வில் சுவீடன் கூட்டுறவு நிலையத்தின்  இலங்கைக்கான பணிப்பாளர் சுபாஸி திஸ்ஸநாயக்க, அந்த நிறுவனத்தின் ஆசிய நாடுகளுக்கான பிராந்திய பணிப்பாளர் மக்னஸ் பேர்ஸன் (சுநபழையெட னுசைநஉவழச கழச யுளயை – ஆயபரௌ Pநசளளழn), சுவீடன் கூட்டுறவு நிலையத்தின்  கிழக்கு மாகாண இணைப்பாளர் ரீ.மயூரன் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் யூ.உதயஸ்ரீதர்,  பயனாளிகள்;  கலந்துகொண்டனர்.(tm)
SHARE

Author: verified_user

0 Comments: