13 Dec 2014

இன்னமும் முடிவில்லை

SHARE
எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், தமிழ் தேசிய கூட்டமைப்பு பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு என்று வெளியாகிய செய்தி பிழையெனவும் இதுவரையில் தாம் எந்த முடிவையும் எடுக்கவில்லை எனவும் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் வெள்ளிக்கிழமை (12) தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையிலான அவசர சந்திப்பொன்று வலி.தெற்கு (உடுவில்) பிரதேச சபை மண்டபத்தில் வியாழக்கிழமை (11) மாலையில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், மரியாபரணம் சுமந்திரன், மாவை சேனாதிராசா, சிவஞானம் சிறிதரன், சிவசக்தி ஆனாந்தன், வினோ நோதராதலிங்கம், ஈஸ்வரபாதம் சரவணபவன், மாகாண சபை உறுப்பினர்களான  தர்மலிங்கம் சித்தாத்தன், இமானுவல் ஆர்னோல்ட் உள்ளிட்டவர்களுடன் கூட்டமைப்பின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். ஊடகவியலாளர் இந்த சந்திப்புக்கு அனுமதிக்கப்படவில்லை.

இந்த சந்திப்பில், மைத்திரிக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், சுரேஸ் பிரேமச்சந்திரனுடன் தொடர்புகொண்டு கேட்டபொழுதே அவர் அதனை மறுத்துள்ளார்.

வடமாகாண சபையின் செயற்பாடுகளை பற்றியும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் அபிப்பிராயங்கள் பெறப்பட்டதே தவிர, முடிவுகள் எதுவும் எடுக்கவில்லை என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும் தெரிவித்தார்.(tm)
SHARE

Author: verified_user

0 Comments: