சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களை தடுக்க அனைவரும் ஒத்துழைக்கவேண்டும்
என்று காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் தெரிவித்தார்.
கிராம மட்ட சிறுவர் உரிமை கண்காணிப்புக்குழு உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு, காத்தான்குடி பிரதேச செயலக மண்டபத்தில் வியாழக்கிழமை (11) நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
'கிராம மட்ட சிறுவர் உரிமை கண்காணிப்புக் குழுக்களின் நடவடிக்கைகளை துரிதப்படுத்தவேண்டும். இதன் உறுப்பினர் சிறப்பாக செயற்படுவதுடன், சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் அவதானமாக இருக்கவேண்டும்.
சில சிறுவர்கள் தங்களுக்கு நடக்கும் துஷ்;பிரயோகங்களை வெளிப்படுத்தமாட்டார்கள். அவர்களின் விடயங்களில் கவனமெடுத்து செயற்பட வேண்டும்' என தெரிவித்தார்.
காத்தான்குடி பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தரின் ஒருங்கமைப்பில் நடைபெற்ற இந்த செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் வி.குகதாசன் உட்பட அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர்கள், வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கிராம மட்ட சிறுவர் உரிமை கண்கானிப்புக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

.jpg)
0 Comments:
Post a Comment