17 Dec 2014

தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதலில் மாணவர்கள் உட்பட 130 பேர் பலி

SHARE
பாகிஸ்தானின் பெஸ்வார் நகரிலுள்ள இராணுவ பாடசாலையின் மீது தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அங்கு கற்ற மாணவர்கள் உட்பட 130 பேர் உயிரிழந்துள்ளனர். 120க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் அதிக எண்ணிக்கையானோர் மாணவர்கள் என்றும் தாக்குதல் நடத்தப்பட்ட வேளையில் சுமார் 500 மாணவர்கள் பாடசாலையில் இருந்தனர் என்றும் 10 வயதுக்கும் 20 வயதுக்கும் உட்பட்ட மாணவர்களே காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர் என்றும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அபம்பாடசாலையில் கல்விகற்கும் மாணவர்களில் அதிகமானவர்கள் இராணுவத்தின் பிள்ளைகள்.
தீவிரவாதிகள் பாடசாலை வளாகத்துக்குள் நுழைந்து சுமார் 8 மணித்தியாலங்களுக்குப் பின் 9 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இத்தீவிரவாதிகள் இராணுவ உடையில் வந்து தாக்குதல் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.(nl)
SHARE

Author: verified_user

0 Comments: