ஒரு நாட்டில் இருக்கின்ற பிரதான ஏதிர்கட்சி சார்பாக ஒரு ஐனாதிபதி வேட்பாளரை நிறுத்த முடியாத அளவுக்கு ஒரு பலமற்ற எதிர்கட்சி என்றால் இந்த உலகிலே ஜக்கிய தேசியக் கட்சிதான்.
ஏன் என்றால் இரண்டாவது தடவையும், ஒரு பொது வேட்பாளரை வைத்துக் கொண்டு அவருக்கு பின்னால் நிற்பது அவர்களின் கட்சியின் இயலாமையையே காட்டிநிற்கின்றது. எனவே இவ்வாறான ஒரு பலமற்ற கட்சியை நம்பி இம்முறை எமது தமிழ் மக்கள ஏமாறக் கூடாது, என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் இரசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.
புட்டிருப்புத் தொகுதியிலுள்ள விவேகானந்தபுரம் கிராமத்தில் நேற்று திங்கட் கிழமை இரவு நடைபெற்ற மககள் சந்திப்பின்பேதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்…….
பட்டிருப்புத் தொகுதி என்பது தனித் தமிழ்த் தொகுதி இந்த தொகுதியிலிருக்கும் தமிழ் மக்கள் அனைவரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக சிறந்த முறையில் சிந்தித்து முடிவினை எடுக்க வேண்டும்.
ஏனெனில் நாங்கள் ஏனைய சமூதாயத்தின் வளர்சியைப்போல் சகல வளங்களையும் பெற்று வாழ வேண்டும். இதற்கான நல்ல சந்தர்ப்பம் இப் பொழுது வந்துள்ளது. ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்து விலகி பிரிவினைவாதம் பேசுகின்ற கட்சிகளுடனும் ஒரு ஸ்திரமற்ற எதிர் கட்சியுடனும் சேர்ந்து பொது வேட்பாளர் செயற்படுகின்றார்.
ஏன் ஸ்திரமற்ற கட்சி என்று கூறுகின்றேன் என்றால் 2010 ஆண்டு இதேபோன்று ஒரு கூட்டு சேர்ந்து கொண்டு தேர்தலில் பல கட்சிக் ஒன்றிணைந்து இறங்கி அது சின்னாபின்னமாகியதை வைத்துக் கொண்டேதான் இதனைக் கூறுகின்றேன்.
ஒரு நாட்டில் இருக்கின்ற பிரதான எதிர்கட்சி சார்பாக ஒரு ஐனாதிபதி வேட்பாளர் ஒருவரை நிறுத்த முடியாத அளவுக்கு ஒரு பலமற்ற எதிர்கட்சி இலங்கையில் இருக்கின்றது என்றால் அது இந்த உலகிலே ஜக்கிய தேசியக் கட்சிதான். இரண்டாவது தடவையும் ஒரு பொது வேட்பாளரை வைத்துக் கொண்டு அவருக்கு பின்னால் நிற்பது ஐக்கிய தேசியக் கட்சியின் இயலாமையினையே காட்டிநிற்கின்றது. எவே இவ்வாறான ஒரு பலமற்ற கட்சியை நம்பி இம்முறை எமது பட்டிருப்பத் தொகுதிவாழ் மக்கள் ஏமாறக் கூடாது.
ஒரு நாட்டிலே கட்சிகள் சேர்ந்து ஒன்றிணைந்து செயற்படுவதற்கு கூட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது பலமான கட்சிகள்தான் கையெழுத்து இடுவாதாகும். ஆனால் இலங்கையிலுள்ள எதிர்க் கட்சிகளின் கூட்டமைப்பில் முதன்முறையாக பாராளுமன்ற உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளார்கள். அந்த வகையில் எதிர் கட்சிகளின் கூட்டமைப்பில் தனிப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்க்களும் அதில் உள்வாங்கப் பட்டிருக்கின்றது.
நிறைவேற்று அதிகாரத்தினை குறைக்க வேண்டும் என்று ஐhதிக கெல உறுமய என்கின்ற கட்சி கூறுகின்றது கூறுகின்றது.
நிறைவேற்று அதிகாரத்தினை இல்லாமல் செய்யவேண்டும் என்று ஜக்கிய தேசியக் கட்சி கூறுகின்றது. இவ்வாறான சிலமுரண்பாடுகளும் எதிர்க் கடசிகளின் கூட்டமைப்பில் காணப்படுகின்றன.
போரினவாத கட்சிகளுடன் சேர்ந்துள்ள இந்த பொது அணி வெற்றி பெற்றால். சிறுபான்மை மக்களுக்குரிய தீர்வினை வழங்குவதற்கு நிறைவேற்று அதிகாரம் இல்லாமல் வழங்கமுடியாது. என்பது உண்மையாகும்.
இவ்வாறன நிலையில் எதிரணிக்கு வாக்களிக்களித்து முன்றாவது முறையாகவும் வெற்றிபெறாத ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்கின்ற சந்ததியாக மட்டக்களப்பு வாழ் தமிழ் மக்கள் மாறக் கூடாது. அள்ளி, அள்ளி எதிர்கட்சிக்கு வாக்களிப்பதனால் எந்தவித பிரயோசனமும் இல்லை. மாறாக இது ஒரு பாராளுமன்ற தேர்தலும் இல்லை, இதில் இரண்டு சிங்களவர்களுக்குத்தான் வாக்களிக்க வேண்டும். அதிலும் தமிழர் ஒருவர் ஐனாதிபதியாக வருகின்ற சந்தர்ப்பம் இருந்தால் நாங்கள் தமிழருக்கு வாக்களிக்கலாம். எனவே வர இருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறப்பொவது ஜமஹிந்த ராஜ பக்சதான் அவருக்குத்தான் எமது மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.
தறபோது பொது வேட்பாளர் அரசாங்கத்தின் ஊழல் பற்றி பேசுகின்றார் அவர் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி வகிக்கும் போது தெரியவில்லையா? ஏன் அவர் தற்போது கூறும் ஊழல் பற்றி அரசில் அங்கம் வகிக்கும்போது மக்களுக்குத் தெரிpவக் வில்லை. தற்போது அவர் இவ்வாறான ஓழல் கதைகளை மக்கள் மத்தியில் தெரிவித்து தனது சுயநலவாத அரசியலைப் பயன்படுத்தி வருகின்றார்.
பொது வேட்பாளர் ஆரம்பத்திலேயே அரசாஙகத்தினை விட்டு வெளியேறி இருந்தால் மக்கள் அவரினை ஏற்றுக் கொண்டிருப்பார்கள் ஆனால் தற்போது அவரை மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
இன்றைய இளைஞர்களின் தேவை வேலைவாய்ப்பாகும் கிழக்கு மாகாணத்தினை எடுத்துக் கொண்டால் வேலைவாய்ப்புக்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் எமது தமிழ் இளைஞர் யுவதிகளுக்குக் கிடைப்பது குறைவாகவே இருக்கின்றது. இதனை எமது மக்கள் சிந்திக்க வேண்டும்.
எனவே இம்முறை ஜனாதிபதில் தேர்தலில் பட்டிருப்புத் தொகுதி மக்கள் உணர்ச்சி பூர்வமாக சிந்திக்காமல், அறிவு பூர்வமாக சிந்தித்து, எமது மக்களின் களினது உரிமைகளை பெற்றெடுப்பதற்கு எமது மக்கள் வழங்குகின்ற ஆணையாக நினைத்து இத் தேர்தலில் அனைவரும் மஹிந்த ராஜபக்சவுக்கு வாக்களிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment