5 Nov 2014

மாதிரிக் கிராம அபிவிருத்திக்காக பழ மரக்கன்றுகள் வழங்கி வைப்பு.

SHARE
தனிமனிதன் விருத்தி அடைவதுனூடே அவனுடைய குடும்பமும், அந்தக் குடும்பம் விருத்தி அடைவதனால் அந்தக் கிராமமும் அதைத் தொடர்ந்துதான் அந்த மாவட்டம், நாடுஎன்பன அபிவிருத்திகாணும் என்பதே பொருளாரார சித்தாந்திகளின் கோட்பாடு.

அதன் அடிப்படையில் யுத்தம், அனர்த்தங்களில் சிதைவடைந்த சமுகத்தினைக் கட்டியெழுப்ப தனிமனித முன்னேற்றத்தினைக் கருத்தில் கொள்ளும் “அரச -தனியார் அமைப்புக்கள் -மக்கள் -பங்களிப்பினூடான” எண்ணக்கருவை அமுல்படுத்தும் கிளினொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள மாதிரிக் கிராமங்களிலுள்ள மக்களுக்கு பழமரக்கன்றுகள் நேற்று செவ்வாய்க்கிழமை (04) வழங்கி வைக்கப்பட்டன.

இளைஞர் விவகாரங்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சில் உள்ள தேசியமனிதவள அபிவிருத்திச் சபையினால் மேற்படி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுக்கமைய, அடையாளம் காணப்பட்ட தேவைகளின் அடிப்படையில் விவசாய அமைச்சினூடாக அப்பகுதி மக்களின் வீட்டுத் தோட்டத்துக்குத் தேவையான வாழை, மா, கொய்யா, தேசி போன்ற பல 2736 பழமரக்கன்றுகள் கிளினொச்சி மாவட்டத்திலுள்ள சாந்தபுரம், பளை, தம்பகாமம், மற்றும் பள்ளிக்குடா, போன்ற மாதிரிக் கிராமங்களில் அமைந்துள்ள தெரிவு செய்யப்பட்ட நலிவுற்ற குடும்பங்களுக்கு வழங்கிவைக்கப்பட்டதாக  இளைஞர் விவகாரங்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் உதவித் திட்டப் பணிப்பாளர் சி.தணிகசீலன் கூறினார்.

இந்நிகழ்வில் கிளினொச்சி மாவட்ட செயலாளர் திருமதி.ரூ.கேதீஸ்வரன், இளைஞர் விவகாரங்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் உதவித் திட்டப் பணிப்பாளர் சி.தணிகசீலன் ஆய்வு உத்தியோகத்தர் த.செந்தில்நாதன்,  உட்பட பிரதேச செயலாளர்கள், கள உத்தியோகத்தர்கள், தேசியமனிதவள அபிவிருத்திச் சபையின் தொண்டர்கள், உட்படபலர் கலந்து கொண்டிருந்தனர்.












SHARE

Author: verified_user

0 Comments: