21 Nov 2014

அரசில் இருந்து வெளியேறுகிறது அமைச்சர் பட்டாளம்; மைத்திரி தலைமையில் ஊடக மாநாடு

SHARE

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை 100 நாட்களுக்குள் இல்லாது செய்வதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

தற்போது கொழும்பு நகர மண்டபத்தில் இடம்பெறுகின்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் இங்கு மேலும் கூறியதாவது,
தேர்தல் வெற்றியின் பின்னர் அனைத்து ஊடகவியலாலர்களும், ஊடக நிறுவனங்களும் சுதந்திரமாக செயற்பட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளபப்போவதாகவும் அவர் உறுதியளித்தார்.
மேலும் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பதாகவும் 17வது அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தி, 18வது அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தை இரத்து செய்யப்போவதாகவும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

சந்திரிக்கா பண்டாரநாயக்க

மீண்டும் அரசியல் எனும் தனது தாய் வீட்டுக்குள் நுழைய சந்தர்ப்பம் கிடைத்தமையையிட்டு தான் மகிழ்வதாக கண்ணீர் மல்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
“9 வருட மௌத்தின் பின் மீண்டும் அரசியலில் பிரவேசிக்க தினம் தினம் எனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் மட்டுமல்ல பல காரணங்கள் உண்டு அவை ஒவ்வொன்றையும் கூற வெட்கமாக உள்ளது, அது இங்கு முக்கியமில்லை.

கொலை, துஷ்பிரயோகங்களே நாட்டில் இடம்பெறுகின்றன. அதனைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொலிஸாருக்கு பதவி உயர்வு வழங்கப்படுவதோடு, எதிர்ப்பவர்களுக்கு இடமாற்றங்கள் உள்ளிட்ட சிக்கல் ஏற்படுகின்றன.

பலர் என்னை பொது வேட்பாளராக களமிறங்க கூறினர். 18வது அரசியல் அமைப்பு சட்டத்தின் படி முடியும் என்றனர்.

ஆனால் மீண்டும் அவ்வாறு போட்டியிட எந்தவொரு அவசியமும் எனக்கு இல்லை, அரசியல் ரீதியாக தேவையான உதவிகளை வழங்கி நாட்டை கட்டியெழுப்ப உதவுவேன். எந்த பதவியும் தேலையில்லை” என்றும் குறிப்பிட்டார்.(mm)
SHARE

Author: verified_user

0 Comments: